ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கு ; லஞ்சம் பெற்றதாக போலீஸாரையும் விசாரிக்க முடிவு?!

0

கும்பகோணம் ஹெலிகாப்டர் பிதரஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக முன்னாள் எஸ்.பி ஒருவர் மற்றும் ஸ்பெஷல் பிரான்ச் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இருவர் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இந்த வழக்கினை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் விசாரிக்க உள்ளதாகவும், கோடிகளில் பிரதர்ஸ் மோசடி செய்துள்ளதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ்

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்(51).எம்.ஆர்.சுவாமிநாதன்(48) ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்பட்ட இவர்கள் நிதி நிறுவனம் ஒன்றை நடத்திவந்தனர். இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதி, ஹெலிகாப்டர் பிரதர்ஸ் தங்களிடம் ரூ 15 கோடி மோசடி செய்து விட்டதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இதனை தொடர்ந்து அவர்கள் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து ஹெலிகாப்டர் பிரதர்ஸ் தலைமறைவாகினர். பின்னர் எம்.ஆர்.கணேஷைன் மனைவி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வக்கீல் ஒருவது பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த சகோதரர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து கடந்த வாரம் ஹெலிகாப்டர் சகோதரர்களை நான்கு நாட்கள் கஸ்டடி எடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவித்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் முன்னாள் போலீஸ் எஸ்.பி ஒருவர் மற்றும் ஸ்பெஷல் பிரான்ச் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோருக்கும் தொடர்பிருப்பதும் தெரிய வந்ததால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய இருப்பதுடன் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் இதனை விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் போலீஸ் வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புகார் அளித்த தம்பதி

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், " மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த கணேஷ், சுவாமிநாதன் இருவரையும் தனிப்படை போலீசார் கடந்த 5-ம் தேதி புதுக்கோட்டை அருகே கைது செய்தனர். மேலும், கடந்த 9-ம் தேதியில் இருந்து 13-ம் தேதி வரை கஸ்டடியில் எடுத்த போலீஸார் விசாரணை நடத்திய பின்னர் சகோதரர்கள் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் சுவாமிநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததையடுத்து புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் குறித்து புகார் வந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்போது எஸ்.பியாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் காலம் தாழ்த்தியது சந்தேகத்தை ஏற்படுத்தியது.மேலும் சகோதரர்கள் மீது நூற்றுகணக்கான புகார்களும் வந்து கொண்டிருந்தன. இதனை தொடர்ந்து கோவையில் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களை தனிப்படை எஸ்.ஐ தலைமையிலான போலீஸ் டீம் இப்பிரச்னை பெரிதாவதற்கு முன்பே நெருங்கினர்.

போலீஸ் விசாரணையில் சகோதரர்கள்

இந்த தகவலை எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு போலீஸ் டீம் தெரிவித்துள்ளது. அப்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பெரும் தொகை பேரம் பேசப்பட்டது. அதற்கு ஒத்துக் கொண்ட ஹெலிகாப்டர் சகோதரர்கள் பணத்தைக் கொடுத்துள்ளனர். பணத்தை எடுத்து வருவதற்காக எஸ்.பியின் நம்பிக்கையை பெற்ற ஸ்பெஷல் பிரான்ச் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் கோவை சென்று பணம் வாங்கி வந்துள்ளார். பின்னர் இந்த விவகாரம் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

அவர்கள் இந்த வழக்கில் தனி கவனம் செலுத்தத் தொடங்கிய பின்னர் புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள், "நாங்கதான் போலீஸ் கேட்ட பணத்தை செட்டில் செய்து விட்டோமே அப்புறம் ஏன் அரெஸ்ட் செய்றீங்க" எனக் கேட்டு போலீஸாரையே அதிர வைத்துள்ளனர். அதனால் தான் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டார். ஸ்பெஷல் பிரான்ச் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் நாகை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றுக்கும் மாற்றப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்ய்க்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறியுள்ளனர். அதேபோல் சோமசுந்தரம் வங்கிக் கணக்கிற்கு எம்.ஆர் கணேஷ் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 10 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இதில் தொடர்புடைய போலீஸார் சிலர் ஹெலிகாப்டர் பிரதர்ஸை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் முகம் கொடுத்து கூட பேசவில்லை.

Also Read: ``எங்களுக்கு ஏழரை சனி நடக்குது''- கூல் 'ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' டென்ஷனான போலீஸ் டீம்!

தஞ்சாவூர் முன்னாள் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய்

சகோதரர்கள் தங்களை பற்றி எதுவும் சொல்லமாட்டார்கள் என்றுதான் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் உள்ளிட்ட போலீஸார் நினைத்தனர். ஆனால் அவர்கள் பணம் கொடுத்தது பற்றி விவரம் கூறிவிட்டனர்.குறிப்பாக அக்கவுண்டிலிருந்து எந்த தேதி எந்த நேரத்தில் பணம் அனுப்பினேன் என்பது வரை தெரிவித்து விட்டனர். சோமசுந்தரம் வங்கிக் கணக்கில் ரூ 10 லட்சம் வந்தது குறித்து கேட்டதற்கு அவரால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் தவித்துள்ளார். இது போன்ற சில ஆதாரங்களைப் பெற்று விசாரணை டீமிலிருந்த போலீஸார் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னரே ராணிப் பேட்டையில் இருந்த எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் மதுரை பட்டாலியனுக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய்,சோமசுந்தரம் உள்ளிட்ட சில போலீஸார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் விசாரிக்க உள்ளனர். மோசடி செய்யப்பட்ட தொகை கோடிகளில் இருப்பதால் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட உள்ளது.மேலும் தஞ்சாவூர் எஸ்.பியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள ரவளி பிரியா சோமசுந்தரம் உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள போலீஸார் குறித்த தகவல்களைக் கேட்டுள்ளார். இதனால் போலீஸ் வட்டாரமே பரபரப்பாகியுள்ளது. இதில் தொடர்புடையதாகச் சொல்லப்படும் போலீஸ் தரப்பும் பெரும் கலக்கத்தில் உள்ளனர். வரும் நாட்களில் இந்த வழக்கு தொடர்பாக அடுத்தடுத்த பல தகவல்கள் வெளியாகும்" என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3g9NdZW
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*