கொரோனாவால் தாயை இழந்த சிறுமி; வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய டி.எஸ்.பி!

0

புதுக்கோட்டை மாவட்டம் கடம்பராயன்பட்டியைச் சேர்ந்த நிர்மலா என்பவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்தார். அவரின் மகள், 13 வயதுச் சிறுமி ராஜிஸ்ரீ, உடல் நலம் பாதிக்கப்பட்ட தன் அப்பாவுடன் ஜீவனத்துக்கே சிரமப்பட்டு வந்தார்.

கொரோனா மரணம் (Representational Image)

இந்த நிலையில் தான், சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்த இலுப்பூர் டி.எஸ்.பி அருள்மொழி, சிறுமியின் நிலை பற்றி அறிந்து, நேரடியாக அந்தச் சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, காய்கறிகள், பழங்கள், பிஸ்கட் என உணவுப் பொருள்களைக் கொடுத்துள்ளார்.

அதோடு, காவல்துறை சார்பில் தங்களால் முடிந்த உதவிகள் செய்யப்படும் என்று கூறி சிறுமியின் குடும்பத்தை நெகிழ வைத்திருக்கிறார். தொடர்ந்து சிறுமி டி.எஸ்.பியிடம் மனுகொடுத்தார்.

சிறுமிக்கு உதவிய டி.எஸ்.பி

Also Read: `கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு!’ - முதல்வர் ஸ்டாலின்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட டி.எஸ்.பி, உடனடியாக அந்தக் கோரிக்கையை வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்தார். சிறுமிக்கு நேரில் சென்று ஆறுதலும் நம்பிக்கையும் அளித்த டி.எஸ்.பியின் செயலை அந்தப் பகுதி மக்கள் பலரும் பாராட்டினர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3zah23G
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*