கொடநாடு வழக்கு: `முன்னாள் முதல்வர் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டியது தானே?!’ - கார்த்தி சிதம்பரம்

0

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கே புதுப்பட்டி, பனங்குடி பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்ட 11 லட்சம் மதிப்பிலான இரண்டு கலையரங்கங்களை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்பி கார்த்தி சிதம்பரம், "தமிழக அரசு நீட் தேர்வுக்கான சட்ட மசோதா கொண்டு வருவது என்பது தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதே, அதுவே நீட் தேர்வை சட்ட ரீதியாக தடை செய்யாது. மத்திய அரசு, மாநில அரசு, மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா சேர்ந்து தான் இதனை முடிவு செய்ய முடியும்.

இந்தாண்டு சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதுபோல் நீட் தேர்வு நடக்கும். வரும் காலங்களில் நீட் தேர்வை தடை செய்ய திமுக அரசு முயற்சிகள் எடுக்கும் என்று நம்புகிறேன்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வருக்கு ஞானோதயம் வந்துள்ளது. ஒன்பது முறை இந்தியாவிற்கு பட்ஜெட் தாக்கல் செய்த எனது தந்தையை, பொய்யான வழக்கில் அவருக்கு உறுதுணையான அரசு நடவடிக்கை எடுத்த போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஞானோதயம் வரவில்லை. தற்போது அவரும் அவருடைய கட்சியும் இதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டியது தானே.

எடப்பாடி பழனிசாமி

செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளியை திறக்க வேண்டும். பள்ளிகளை திறக்காமலேயே இருக்க முடியாது பள்ளிகள் திறக்காத காரணத்தால் நிறைய குழந்தைகள் வேலைக்குச் சென்று விட்டார்கள். பள்ளி திறந்த பின்பு தான் எத்தனை குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார்கள் என்பது தெரிய வரும்

கொரோனா காலக் கட்டத்தில் குழந்தை திருமணம் இந்தியாவில் அதிகம் நடைபெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது"என்றார்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo


from மாவட்ட செய்திகள் https://ift.tt/3iX8mZ2
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*