சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அவரது புகைப் படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டிய புகாரில் பாஜக இளைஞரணிச் செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை நகர பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக இருப்பவர் லால்சரண் என்ற பாரத்லால். காமராஜர் காலனியைச் சேர்ந்த இவர் ஸ்டூடியோ வைத்துள்ளார். சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இவர் மீது கல்லூரி மாணவி கொடுத்த புகாரில், " நான் நான்காம் ஆண்டு சட்டம் படித்து வருகிறேன். போட்டோ எடுப்பதற்காக பாரத்லால் நடத்தி வரும் ஸ்டூடியோவுக்கு சென்றபோது தன்னுடைய யூடியூபில் நடிக்க வைப்பதாகக் கூறினார்.
அதனால் அவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அதனால் கர்ப்பம் அடைந்தேன். இதைப்பற்றி அவரிடம் கேட்டதற்கு மிரட்டினார்.
Also Read: மதுரை: திருமணமான இரண்டே நாளில் பெண் கொலை; போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை!
மயக்க நிலையில் என்னை வீடியோ எடுத்தைத, எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தவர், இதைப்பற்றி யாரிடமாவது சொன்னால், சமூகவலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று தொடர்ந்து மிரட்டுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
இப்புகாரை விசாரித்த சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாரத்லால் மீது 19/21 u/s 354(B),354(C),328, 376, 509 IPc பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது பாரத்லால் வேறொரு பெண்ணைக் காதலித்து அவருடன் தலைமறைவாகியுள்ளதாகவும், தங்கள் பெண்ணை காணவில்லை என்று அப்பெண்ணின் பெற்றோர் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல் யூ டியூப்பில் நடிக்க வைப்பதாக இன்னும் சில பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அவரைக் கைது செய்த விசாரித்தால்தான் உண்மை தெரியவரும் என்கிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lJZAiW
via
