குளித்தலை அருகே ஈச்சம்பட்டி பகுதியில் நிலப்பிரச்னை காரணமாக இரு தரப்பினரிடையே அடிதடி மோதல் ஏற்பட்டபோது, அதை தடுக்கப் போன முதியவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: கரூர்: போதையில் மனைவியைக் கொன்ற இளைஞர்! - போலீஸுக்கு பயந்து தற்கொலை!
கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள சின்னயம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணாநாயக்கர் (வயது: 55). இவருக்கும், இவரின் சகோதரர் பொம்மாநாயக்கர் என்பவருக்கும் நிலப்பிரச்னை இருந்திருக்கிறது. இதன்காரணமாக, இரண்டு தரப்புக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலப்பிரச்னையை வைத்து, இரண்டு தரப்புக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுமாம். இந்நிலையில், வழக்கம்போல் கிருஷ்ணாநாயக்கர் குடும்பத்தாருக்கும், பொம்மாநாயக்கர் குடும்பத்தாருக்கும் இடையில் மீண்டும் நிலபிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பும் கட்டையால் தாக்கிகொண்டதாக சொல்லப்படுகிறது. இதை பார்த்த கிருஷ்ணாநாயக்கரின் அக்காள் கணவரும், மாமனாருமான காமாநாயக்கர் (வயது: 75) அவர்களின் சண்டையைத் தடுக்க முற்பட்டபோது அவரின் தலையில் தடியால் பின்புறத்தில் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதோடு இந்த மோதலில் கிருஷ்ணாநாயக்கர் (65), இவரின் மகன் சின்னச்சாமி (27) ஆகிய இருவருக்கும் ரத்தகாயம் ஏற்பட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று, திருச்சி அரசுமருத்துவனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தோகைமலை காவல் நிலைய போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பொம்மாநாயக்கர், பெருமாள், குமார், செல்லபாண்டியன், முத்துச்சாமி, பாலசுப்ரமணி, வேல்முருகன் ஆகிய 7 பேர் மீது வழக்குபதிந்து, விசாரணை செய்து வருகின்றனர். உறவினர்களின் நிலப்பிரச்னை தொடர்பான சண்டையை விலக்க போன முதியவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: `ஏழு பேருக்கு தூக்கு தண்டனை!’ - தமிழகத்தை உலுக்கிய மருத்துவர் சுப்பையா கொலை வழக்கின் பின்னணி
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fHvZCH
via
