`என்னோட பேசாத நீ, உசிரோட இருக்ககூடாது' -திருமணம் தாண்டிய உறவு.. பெண்ணை வெட்டிக் கொன்ற முதியவர்

0

திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண் ஒருவர், தன்னோடு பேசுவதை நிறுத்தியதால் கோபமான 70 வயது முதியவர், அரிவாளால் அந்த பெண்ணை வெட்டிக் கொடூரமாக கொன்ற சம்பவம், கரூர் மாவட்ட மக்களை அதிர வைத்திருக்கிறது.

கொலை செய்யப்பட்ட பழனியம்மாள்

Also Read: கரூர்: போதையில் மனைவியைக் கொன்ற இளைஞர்! - போலீஸுக்கு பயந்து தற்கொலை!

கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள சேவாப்பூரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள் (55). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி என்கிற மணிநாயக்கர். 70 வயது முதியவரான மணிநாயக்கருக்கும், பழனியம்மாளுக்கும் இடையில் கடந்த 30 ஆண்டுகளாக திருமணம் தாண்டிய உறவு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இருவரின் வீடுகளிலும் இந்த விவகாரம் தெரிந்தாலும், இருவரும் திருமணம் தாண்டிய உறவில் தொடர்ந்து இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக ராமசாமியிடம் பழனியம்மாள் பேசுவதில்லை என்று சொல்லப்படுகிறது.

கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதம்

இதனால், ஆத்திரமடைந்த ராமசாமி நேற்று அதிகாலை பழனியம்மாளின் வீட்டுக்கு அரிவாளுடன் சென்று, தூங்கிக்கொண்டிருந்த பழனியம்மாளை வெட்டியதில், பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலவிடுதி காவல் நிலைய போலீஸார், வழக்குப் பதிவு செய்து, ராமசாமியை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட பழனியம்மாளின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.திருமணம் தாண்டிய உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை முதியவர் ஒருவர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3CcaQKH
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*