கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பனவிளையை சேர்ந்த ராஜன் (39) என்பவர் குளச்சல் வி.கே.பி ஸ்கூல் அருகில் பெயிண்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது ஒர்க் ஷாப்பில் டிப் டாப் ஆக சென்ற ஒருவர், கார் டயர் டிஸ்க் ரிப்பேரை சரி செய்திருக்கிறார். சரி செய்த பின் ஒர்க்ஷாப் ஊழியர் அதற்கான கூலியை கேட்டபோது அவர் குளச்சல் டி.எஸ்.பி அலுவலகத்தில் குற்றப்பிரிவு எஸ்.ஐ-ஆக இருப்பதாக கூறியதுடன், பணம் கொடுக்கமாட்டேன் என அடாவடி செய்துள்ளார்.
இதனால் அவர் மீது சந்தேகமடைந்த ஒர்க்ஷாப் ஊழியர்கள் அதுபற்றி உரிமையாளர் ராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஒர்க்ஷாப்பிற்கு விரைந்து சென்ற ராஜன், அங்கிருந்த அந்த டிப்டாப் ஆசாமியை பார்த்தார். அவர் ஏற்கனவே இது போன்று இரண்டு முறை டயர் டிஸ்க்கை சரி செய்துவிட்டு போலீஸ் எனக்கூறி பணம் கொடுக்காமல் சென்றுள்ளார் என ராஜன் கூறினார். உடனே ஒர்க்ஷாப் ஊழியர்கள் அவரை பிடித்து குளச்சல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
குளச்சல் போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த டிப் டாப் ஆசாமி மண்டைக்காடு அருகே காட்டுவிளையை சேர்ந்த சேகர் (52) என்பது தெரிய வந்தது. அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காவல் துறையில் ஏட்டாக வேலை பார்த்துள்ளார். அப்போது துறை ரீதியான நடவடிக்கையில் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளார். இதையெல்லாம் விசாரணையில் தெரிந்துகொண்ட போலீஸார் அவரை சோதனை செய்ததில் அவரிடம் இருந்து இரண்டு அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Also Read: சென்னை: ஐ.சி.எஃப்-ல் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி; 7 பேர் கைதான பின்னணி!
அவர் காவல் துறையில் வயர்லெஸ் பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாக ஒரு அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிதுந்தது. மற்றொரு அடையாள அட்டையில் அவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நாகர்கோவில் மண்டலத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பணி செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த இரண்டு அடையாள அட்டைகளும் போலியானவை என போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து ஒர்க்ஷாப் உரிமையாளர் ராஜன் கொடுத்த புகாரின் பேரில் சேகர் மீது ஆள் மாறாட்டம் மற்றும் ஏமாற்றுதல் (இந்திய தண்டனை சட்டப்பிரிவு 419,420) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாக கூறி பணம் கொடுக்காமல் ஒர்க் ஷாப்பில் கார் சரிசெய்த ஆசாமியின் செயலால் குளச்சலில் பரபரப்பு ஏற்பட்டது.
விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3k9zbbI
via
