தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறப்பதற்கும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், பள்ளிக்கல்வித்துறை செயலர் வல்லவன், இயக்குநர் ருத்ரகவுடு, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு மற்றும் இதர முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி, "கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு எடுத்துள்ளோம். வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்புகளும், அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும். 9 மற்றும் 10-ம் வகுப்புகள் ஒரு நாளும், அடுத்தநாள் 11, 12-ம் வகுப்புகளும் நடக்கும். கல்லூரிகளும் அதேபோல் சுழற்சி முறையில் நடக்கும். அதை உயர்கல்வித்துறை தெரிவிக்கும். கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளோம்.
தொற்று பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் பள்ளி, கல்லூரிகளில் எடுப்போம். அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு பெரும்பாலானோர் போட்டுள்ளனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகளைப் பொருத்தவரை தமிழகத்தைப் பின்பற்றியே செயல்படுகிறோம். ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் ரூ.260 கோடிக்கு பணிகள் நடக்கின்றன. ஒப்பந்தப் புள்ளிகள் கோரியுள்ளோம். நேரு வீதி உள்பட நகரப்பகுதியில் மின்விளக்குகளை மாற்ற இருக்கிறோம். வ.உ.சி, கல்வே கல்லூரி பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படும். கடற்கரையை ஒட்டியுள்ள சாலைகளை நீட்டிக்கிறோம். கடற்கரையில் கற்கள் கொட்டப்பட்ட பகுதியை சாலையாக மாற்ற உள்ளோம்.
Also Read: `பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு; ஆன்லைன் மூலம் தேர்வு!’ - புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர்
அதேபோல கார் பார்க்கிங் வசதிகளையும் ஏற்படுத்த உள்ளோம். அண்ணா திடல் அழகான திடலாக மாற்ற பணிகள் நடக்கின்றன. ஆறு மாதங்களில் அதன் பிரதிபலிப்பு தெரிய ஆரம்பிக்கும். நகர் பகுதி முழுவதும் சி.சி.டி.வி கேமரா பொருத்தவுள்ளோம். பட்ஜெட் போடும் முன்பு ஒப்புதல் மத்திய அரசிடமிருந்து வந்துவிடும். 26-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளோம். வரும் 26-ம் தேதி காலை ஆளுநர் உரையும், அதைத் தொடர்ந்து 11 மணிக்கு துணை சபாநாயகர் தேர்தலும் நடக்கும். எத்தனை நாள்கள் சட்டப்பேரவை நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு எடுக்கும். மூன்றாவது அலை வரக்கூடாது என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3B35BLV
via
