தாமிரபரணி நதிநீர் இணைப்புத் திட்டம் எப்போது முடிவடையும்? - சபாநாயகர் அப்பாவு பதில்

0

நெல்லை மாவட்டத்தில் மழைக் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேறும் 15 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்தத் தண்ணீரை வறட்சிப் பகுதிகளான ராதாபுரம், சாத்தான்குளம் உள்ளிட்ட தேரிக் காடுகள் அமைந்த பகுதிகளுக்குக் கொண்டு செல்வதாக 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

நதிநீர் இணைப்புத் திட்டம் இறுதிக்கட்டப் பணி

Also Read: தம்பி டீ இன்னும் வரல! - தாமிரபரணி உபரிநீர்... உபயோகப்படப்போவது எப்போது?

நதிநீர் இணைப்புத் திட்டம், நான்கு கட்டங்களாகச் செயல்படுத்த முடிவெடுத்து பணிகள் நடந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்தத் திட்டத்தை வேகமாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி 369 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்த ஒப்புதல் அளித்தார். முதல்கட்டமாக 214 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இந்த திட்டம் தொடங்கியது.

நதிநீர் இணைப்புத் திட்டம் நடக்கும் இடம்

அதன்படி மூன்று கட்டப் பணிகள் முழுமையாக முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்தது. இந்த நிலையில், நெல்லை –கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவைத் தலைவருமான அப்பாவு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக ரூ 17.09 கோடி மதிப்பில் நெல்லை-குமரி நான்குவழிச் சாலையில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இந்தப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ``மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவுத் திட்டமான தாமிரபரணியாறு- நம்பியாறு- கருமேனியாறு இணைப்புத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார் .

நதிநீர் இணைப்புத் திட்டம் தொடர்பான பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளது. தற்போது நெல்லை –கன்னியாகுமரி சாலையில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதே போன்று ரயில்வே பாலம் ஒன்றும் கட்டப்பட வேண்டும் அதற்கான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவு படுத்தப்பட்டுள்ளன.

பாலம் அமைக்கும் பணிகள் நடக்கவுள்ள இடம்

Also Read: நெல்லை: "தாமிரபரணி நதிநீர் இணைப்புத் திட்டம் முடக்கப்படுகிறது" - முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை புகார்

நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீர் வெள்ளநீர் கால்வாய் வழியாக ராதாபுரம், சாத்தான்குளம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்படும். அதன் மூலம் 50,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயனடையும்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3jp6lUj
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*