நெல்லை-தென்காசி இடையேயான சாலை அபாயகரமான வளைவுகள் கொண்டதாகவும் குறுகலானதாகவும் இருந்தது. அதனால் குற்றாலம் சீசன் காலங்களில் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கின.
Also Read: ஏரிக்கரையில் மரம் வளர்ப்பது ஆபத்தா? பொதுப்பணித்துறையால் வெட்டப்பட்ட மரங்கள்; நடந்தது என்ன?
ஆதனால், இந்தச் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும் வணிகர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று 2018-ம் ஆண்டில் இப்பணிகளுக்காக 412 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரண்டு வருடங்களில் இப்பணிகள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நெல்லை-தென்காசி இடையேயான இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்தன. அத்துடன், சாலையோரம் நின்ற 1400 பசுமையான மரங்கள் வெட்டப்பட்டன. ஆனாலும் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதன் பின்னரே சாலைப் பணிகளைத் தொடங்க நெடுஞ்சாலைத் துறை முன்வந்தது.
தற்போது நெல்லை-தென்காசி இடையிலான 45 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக சாலை அமைக்கும் பணி நடக்கும் நிலையில், ஏற்கெனவே பாதி மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், ஆலங்குளம் முதல் தென்காசி வரையிலான பசுமையான மரங்களை வெட்டும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
சாலையோரத்தில் உள்ள புளிய மரங்கள், ஆல், புங்கை, வேம்பு உள்ளிட்டவை வெட்டப்படுவதால் அப்பகுதி முழுவதும் வெறுமையாகக் காட்சியளிக்கின்றன. இவற்றில் பல மரங்கள் பழைமையானவையாக இருந்த போதிலும் சில மரங்கள் 10 வருடங்களுக்குள் வளர்ந்தவையாக இருக்கின்றன.
Also Read: `மரம் வளர்த்தால், மழை வரும் என்பது உண்மைதானா?’ ஓர் அலசல்!
இது குறித்து தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், ``சிறிய மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். அவற்றை மாற்று இடங்களில் நடுவதற்கு மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையும் முன்வர வேண்டும். சாலைகளை விரிவாக்கம் செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்குச் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கும் அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்கிறார்கள்,
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3saDzL4
via
