கேரள மாநிலத்தின் முக்கிய தொழில் நகரமாக விளங்குவது கொச்சி மாநகரம். சினிமா, துறைமுகம் மற்றும் ஏராளமான தொழிற்வாய்ப்புகள் இங்கு அமைந்துள்ளன. கொச்சியில் வேலை செய்வதற்காக தினசரி தொழிலாளர்கள் தொலைவில் இருந்து சென்றுவருகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே கட்டுச் சோறு எடுத்துக்கொண்டு செல்வார்கள். வேலைக்கு நேரம் ஆகிவிட்டது என்று மதிய உணவு எடுக்காமல் செல்லும் தொழிலாளர்கள் அன்று சாப்பிடாமலே வீடு திரும்புவார்கள். கொச்சியில் மதிய உணவு விலை அதிகம் என்பதே அதற்கு காரணம் என்கிறார்கள். ஏற்கெனவே 'பசி இல்லாத கேரளம்' என்ற திட்டத்தை கேரள அரசு பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் பத்து ரூபாய்க்கு மதிய உணவு திட்டம் கொச்சியில் நேற்று தொடங்கப்பட்டது. கொச்சி மாநகராட்சி மேயர் அனில்குமார் தலைமையில், நடிகை மஞ்சு வாரியார் இதைத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கொச்சி மேயர் அனில்குமார், "கொரோனா லாக்டெளன் காலத்தில் பொதுமக்களின் பசியாற்ற சமுதாய அடுக்களை என்ற திட்டத்தை கேரள அரசு செயல்படுத்தியது. அதில் உணவு வழங்குவதற்காக பொருட்களாகவோ, பணமாகவோ மக்கள் உதவி செய்து வந்தனர். அதை அப்படியே கேரள அரசு சமுதாய ஓட்டல்களாக மாற்றி 20 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கொச்சி மாநகரத்தில் மக்களின் பங்களிப்புடன் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
தினமும் 1500 பேருக்கு உணவு வழங்கும் விதமாக குடும்ப ஸ்ரீ (சுய உதவிக்குழு பெண்கள்) மூலம் இந்த மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக முதல் நாளிலேயே சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பகிரப்பட்டு பலர் உதவி செய்திருக்கின்றனர். வரும் காலங்களில் ஒரு சமையல் மையத்தில் இருந்து பல பகுதிகளுக்கு உணவு கொண்டு சென்று விநியோகிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும். இப்போது பயிற்சிபெற்ற 14 குடும்ப ஸ்ரீ மகளிர் இணைந்து சமையல் பணியை செய்கின்றனர்.
Also Read: `போன் செய்தால் வீடு தேடி வரும் உணவு!' - பசி போக்கும் திட்டத்துக்கு கரூர் மக்கள் வரவேற்பு
சமையல் பணிகளை ஒருங்கிணைப்பது சவாலான காரியமாக உள்ளது. பத்து ரூபாய்க்கு சாதம், சாம்பார் அல்லது எதாவது ஒரு குழம்பு, பொரியல் மற்றும் ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் சில சிறப்பு பதார்த்தங்கள் உள்ளன. அவைகளுக்கு தனியாக பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்" என்றார். கொச்சி மாநகரத்தைப் போன்று பிற மாந்கரங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3aqmmoR
via
