திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையம்; தீக்குளிக்க முயன்ற 2 விவசாயிகள்; போராட்டத்தில் என்ன நடந்தது?

0

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள குரும்பிவயல் கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைப் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இங்குக் கடந்தாண்டைப் போல நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் இப்பகுதி விவசாயிகள், அறுவடை செய்த நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையம் இருந்த பகுதியில் கொண்டு வந்து குவித்து வைத்தனர். கடந்த பல வாரங்களாகவே விவசாயிகளின் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலைய திறப்பிற்காகக் காத்துக்கிடக்கின்றன.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் இங்குள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு, முளைக்கத் துவங்கிவிட்டன. இந்நிலையில்தான், இதனைத் தடுக்க தங்கள் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் உடனே திறக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளிடம் கடந்த ஒருவாரமாகவே விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

போராட்டத்தில் விவசாயிகள்

Also Read: `நெல் கொள்முதல் ஊழல்கள்; முடிந்தால் தடுத்துப் பாருங்கள்!' - மு.க. ஸ்டாலினுக்கு `ஊழல்பேய்'களின் சவால்

ஆனாலும், திறக்கப்படாததால், ஆத்திரமடைந்த குரும்பி வயல் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர், நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் நெல் கொள்முதல் நிலையம் திறக்காமல் இங்கிருந்து கிளம்ப மாட்டோம் என்று சாலைகளிலேயே அனைவரும் படுத்துப் புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாவதாகக் கூறி உணர்ச்சிவசப்பட்ட விவசாயிகள் இரண்டுபேர் பெட்ரோலை ஊற்றித் தீக்குளிக்க முயன்றனர்.

தீக்குளிக்க முயன்ற இருவரையும் தடுத்த போலீஸார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். இதற்கிடையே, இரண்டு விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்திருந்த விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர். விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட குரும்பிவயல் மக்களிடம் கேட்டபோது, ``கடந்த 2 வருடங்களாகவே குரும்பிவயலில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. திடீரென தற்போது நிறுத்திட்டாங்க. இங்குள்ள பகுதியில்தான் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. எங்கள் பகுதி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்காமல், வேறு பகுதி நெல் கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு செல்லச் சொல்கின்றனர்.

போராட்டத்தில் விவசாயிகள்

Also Read: நெல் கொள்முதல்: ``ஆன்லைன் பதிவு இல்லாமலும் நெல் வழங்கலாம்!" - உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

இதனால், தேவையில்லாத குளறுபடிகள் பிரச்சினைகள் உண்டாகும். கொள்முதல் நிலையம் திறப்பதற்குத் தேவையான நெல் மூட்டைகள் இங்கு இருக்கின்றன. திறக்கப்படும் வரையிலும் போராட்டத்தைத் தொடருவோம்"என்றனர்.

இதற்கிடையே, போராட்ட இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், நாளை அக்டோபர் 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையிலும் நெல் கொள்முதல் நிலையம் திறந்திருக்கும். அதற்குள் விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்யுங்கள். அதன்பின்பு பொது இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தப்படும்" என்றார். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3art8ef
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*