தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரப்பட்டினம், கருங்காளி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு வர்சு, பேச்சியம்மாள், பெருமாள், லட்சுமி என்கிற மூன்று திருமணானமான மகள்களும், ஒரு திருமணமான மகனும் உள்ளனர். மூன்று மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மகன் பெருமாள் உள்ளூரில் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், மகன் பெருமாளின் வீட்டின் அருகே தனியாக வசித்து வருகிறார் சுடலை.
முத்தம்மாள், பெருமாள் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். இருப்பினும் சுடலைக்கும், முத்தம்மாளுக்கும் அடிக்கடி சிறுசிறு பிரச்னைகள் வருவதும் உறவினர்கள் சமாதானப்படுத்தி வைப்பதும் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், தான் வீட்டில் வைத்திருந்த ரூ.500-ஐக் காணவில்லை எனச் சொல்லி முத்தம்மாளிடம் தகராறில் ஈடுபட்டார் சுடலை.
’உங்க பணத்தை நான் ஏன் எடுக்கப்போறேன். எனக்கு எதுக்கு அந்தப் பணம்” எனச் சொல்ல, “நீதான் எடுத்திருப்ப.. ஒழுங்கா பணத்தைக் கொடு” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்ற, ஆத்திரத்தில் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து முத்தம்மாளை வெட்டினார். இதில், முத்தம்மாளின் இடது கை மணிக்கட்டு துண்டானதோடு துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து மனைவியைக் கொலை செய்துவிட்டு வீட்டின் அருகிலேயே உட்கார்ந்திருந்த சுடலையை குலசேகரன்பட்டினம் போலீஸார் கைது செய்தனர்.
தாய் கொலை செய்யப்பட்ட தகவலறிந்ததும் வெளியூரில் இருந்த மகள்கள் குலசேகரன்பட்டினத்தில் உள்ள பெருமாளின் வீட்டிற்கு வந்தனர். அந்த நேரத்தில் போலீஸார், கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை கைப்பற்றுவதற்காக சுடலையை வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்போது, சுடலையைக் கண்ட ஆத்திரத்தில் மகன் பெருமாள் மற்றும் மகள்கள் சுடலையை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read: குடிபோதையில் தினமும் சித்ரவதை: சகோதரனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது!
“முத்தம்மாளை மாதிரி அமைதியானவளை பார்க்க முடியாது. அவளோட கணவர் சுடலை ஒரு முன்கோபக்காரன். எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டு கோபப்படுவான். ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆன நாளுல இருந்தது ஒரே சண்டை சச்சரவுதான். சுடலை, ஒழுங்கான எந்த வேலைக்கும் போக மாட்டார். முத்தம்மாள்தான் நூறு நாள் வேலைக்கும், கூலி வேலைக்கும் போயி குடும்பத்தை நடத்திட்டு வந்தா. இவனோட தொல்லை தாங்க முடியாமத்தான் மகன் பெருமாளோட வசிச்சிட்டு வந்தா.
அப்படி இருந்தும் ஏதாவது காரணத்தைக் கண்டுபிடிச்சு சண்டை போடுவான். நாலு வருசத்துக்கு முன்னாலகூட, ஒரு சண்டையில ஆத்திரத்துல முத்தம்மாளை அரிவாளால் கண்மூடித்தனமா வெட்டியதில் கையில் காயம் ஏற்பட்டது. இந்த வழக்குல ஜெயில்ல இருந்துட்டுதான் வந்தார். அதுக்குப் பிறகும் தேவையில்லாம சண்டை போடுவார். அவன் சண்டை போடுறதுல நியாயமான காரணமே இருக்காது. இப்போ கூட 500 ரூபாயைக் காணும்னு சொல்லி சண்டை போட்டு அநியாயம முத்தம்மாளைக் கொன்னுட்டான்” என்றனர் அப்பகுதியினர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3AzkxRo
via
