நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட 14 வார்டு, 30 கிராம பஞ்சாயத்துக்கான வாக்கு எண்ணிக்கை டக்கரம்மாள்புரத்தில் உள்ள ரோஸ்மேரி கல்லூரியில் நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவர்கள், வேட்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கையின்போது சிறிய சலசலப்பு ஏற்பட்ட நிலையில், போலீஸார் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினர்.

பாளையங்கோட்டை யூனியன் வாக்கு எண்ணிக்கை நடந்தபோது, ஒரு வாக்குச் சீட்டைப் பார்த்த முகவர்களும் அலுவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வாக்குச் சீட்டில் எந்த சின்னத்திலும் முத்திரை அளிக்கப்படவில்லை. அதில், "எனக்கு எந்த வேட்பாளரும் ₹.500 வழங்கவில்லை. அதனால் நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை" என எழுதப்பட்டிருந்தது
அதே மையத்தில் மற்றொரு வாக்குச் சீட்டில், சின்னத்தின் மீது முத்திரை குத்துவதற்குப் பதிலாக கையெழுத்து இடப்பட்டிருந்தது. அதனால் அந்த வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு வாக்குச் சீட்டில் முத்திரைக்குப் பதிலாக கைநாட்டு வைக்கப்பட்டிருந்ததால் அதையும் செல்லாத வாக்காக அதிகாரிகள் அறிவித்தனர்.

மானூர் யூனியனுக்கு உள்பட்ட வாக்குகள் ராணி அண்ணா கல்லூரியில் எண்ணப்பட்டது. அதில், 2-வது வார்டில் அ.ம.மு.க வேட்பாளர் முத்துப்பாண்டி என்பவர் வெற்றி பெற்றார். அதே பகுதியில் 4-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் உடையம்மை என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lzydHU
via
