சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவர் - 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிமன்றம்

0

கரூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 72 வயது முதியவருக்கு, 20 ஆண்டு சிறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

அரவக்குறிச்சி

Also Read: பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை! முன்விரோதம் காரணமா?

கரூர் மாவட்டம், பள்ளபட்டியை அடுத்து இருக்கிறது, பாப்பநாயக்கன்பட்டி. இந்த கிராமத்தில், கடந்த ஆண்டு வீட்டிற்கு முன்பு 8 வயது சிறுமி ஒருவர், சக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நாட்ராயன் என்ற 72 வயது முதியவர், அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன்பிறகு, முதியவர் அந்த சிறுமியிடம் பாலியல் வதை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணாமல் அந்த சிறுமியின் பெற்றோர் தேடிய போது, நாட்ராயன் வீட்டில் இருந்து அந்த சிறுமியின் அழுகுரல் கேட்டிருக்கிறது. உடனடியாக, அங்கே சென்று சிறுமியை மீட்ட பெற்றோர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுமியின் தாய், தனது மகளை பாலியல் வதை செய்த முதியவர் நாட்ராயன் மீது, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

நாட்ராயன்

அதனைத்தொடர்ந்து, அரவக்குறிச்சி காவல்நிலைய போலீஸார், நாட்ராயனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதி நசீமா பானு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி நாட்ராயனுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ArazBB
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*