விஜய் மக்கள் இயக்கம்: வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் செய்த நிர்வாகி நீக்கம்!

0

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேலூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சி மன்றங்களில் களமிறங்கியிருப்பது மொத்தமே 11 வேட்பாளர்கள்தான். இவர்களை ஆதரித்து அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அக்டோபர் 2-ம் தேதி குடியாத்தம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக வந்தார். அப்போது, 20-க்கும் மேற்பட்ட கார்கள் புடைசூழ சென்ற புஸ்ஸி ஆனந்த்தை தேர்தல் விதிமீறியதாகக் கூறி பறக்கும் படையினரும், போலீஸாரும் தடுத்துநிறுத்தினர். வழக்கு பதிவு செய்யப்படும் என போலீஸார் எச்சரித்தனர். இதையடுத்து, வேட்பாளர்களிடம் பெயருக்குத் தலைக்காட்டிவிட்டு புஸ்ஸி ஆனந்த் அங்கிருந்து புறப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வேலூர் விஜய் மக்கள் இயக்கத்துக்குள் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Also Read: `விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிக்கு இணையானது; கொடியை அகற்றுக!’- நிர்வாகிகளை அதிரவைத்த அதிகாரிகள்

குடியாத்தத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கார்கள்

காட்பாடி ஒன்றிய பொருளாளராக உள்ள சுகுமார் என்பவர் மக்கள் இயக்கத்துக்கு எதிராக செயல்பட்டுவந்ததாகக் கூறி இயக்கத்திலிருந்தே வெளியேற்றப்பட்டிருக்கிறார். அடிப்படை உறுப்பினர் உட்பட அவர் வகித்துவந்த அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டிருக்கிறது. சுகுமாருடன் இயக்க நிர்வாகிகள் யாரும் தொடர்புவைத்துக் கொள்ளக்கூடாது என்று வேலூர் மாவட்டத் தலைவர் ஆர்.வேல்முருகன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து, விஜய் மக்கள் இயக்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் வேல்முருகனிடம் கேட்டபோது, ``சீட் கிடைக்காத கோபத்தில், இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு போட்டியிடும் வேட்பாளரை எதிர்த்து சுகுமார் பிரசாரம் செய்துள்ளார். இயக்கத்தின் கட்டுப்பாட்டைமீறி அவர் செயல்பட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்’’ என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ajFQMd
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*