கும்பகோணம், பந்தநல்லூர் அருகே உள்ள வேட்டமங்கலம் கீழத் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் பிரபாகரன்(22)ஆட்டோ டிரைவர். காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45) வெல்டர் வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு காமாட்சிபுரம் கடைவீதியில் பிரபாகரனும் அவரது தம்பி விக்னேஷும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மணிகண்டன் வந்திருக்கிறார். இதையடுத்து பிரபாகரனுக்கும், மணிகண்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் சண்டையாகி முற்றிய நிலையில் மணிகண்டன் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபாகரனைக் குத்தியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ் மணிகண்டனைத் தடுக்க முயன்றபோது விக்னேஷுக்கு காயம் ஏற்பட்டது.
பிரபாகரன் உடலில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்தார். அருகில் இருந்தவர்கள் பிரபாகரகனைத் தூக்கிக்கொண்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர் ஆனால் செல்லும் வழியிலேயே பிரபாகரன் இறந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த பந்தநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பிரபாகரன் உடலைக் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தம்பி விக்னேஷை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
Also Read: `என் மகன் வலியால் துடிச்சதைப் பார்க்க முடியல'- மகனைக் கருணைக் கொலை செய்த தந்தை!
இதற்கிடையில் 11-ம் வகுப்பு படிக்கும் மணிகண்டனின் மகளும், பிரபாகரனும் பழகிவருவதாகவும், பிரபாகரன் மாற்று சாதியைச் சேர்ந்தவர் என்பதால் மணிகண்டன் இதனைக் கடுமையாக எதிர்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதே காரணத்தைச் சொல்லி மணிகண்டன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரபாகரன் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு எதிரே சாலை மறியலில் ஈடுப்பட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், `` நேற்று இரவு கத்தியால் குத்தி பிரபாகரனை கொலை செய்துவிட்டார். இதையடுத்து மணிகண்டனைக் கைது செய்திருக்கிறோம். என்ன காரணம் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3v2j5Wn
via
