மீண்டும் இயக்குநராகும் ஐஸ்வர்யா தனுஷ்... கதை யாருடையது?

0

மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். படத்தை லைகா தயாரிக்கிறது. '3', 'வை ராஜா வை' படங்களை அடுத்து அவர் இயக்கும் மூன்றாவது படம் இது. இடையே 'சினிமா வீரன்' என்ற டாக்குமென்ட்ரியையும் அவர் இயக்கியிருந்தார்.

ஐஸ்வர்யா தனுஷின் படத்தை லைகா தயாரிக்க முன்வந்தது எப்படி என லைகா வட்டாரத்தில் விசாரித்தோம்.

'' 'வை ராஜா வை' படத்தை இயக்கிய கையோடு குடும்பம், குழந்தை வளர்ப்பு என பிசியானார் ஐஸ்வர்யா தனுஷ். அதன்பிறகு நேரம் கிடைக்கவே, மீண்டும் டைரக்ஷனில் இறங்க திட்டமிட்டார். அந்த சமயத்தில் சஞ்சீவ் என்பவர் த்ரில்லர் கதை ஒன்றை ஐஸ்வர்யாவுக்கு சொல்லியிருக்கிறார். கதை ரொம்பவே பிடித்துவிட, அதையே இயக்கும் ஐடியாவில் இருந்தார். ஆனால், அவர் லைகாவில் கமிட் ஆன கதை யதேச்சையானது.

தனுஷ், ஐஸ்வர்யா

சமீபத்தில் கொரோனா நிவாரண நிதியாக முதல்வரிடம் 2 கோடி ரூபாயை நேரில் வந்து கொடுப்பதற்காக லைகா நிறுவனர் சுபாஷ்கரன் சென்னை வந்திருந்தார். அப்போது சுபாஷ்கரனை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார் ஐஸ்வர்யா தனுஷ். ரஜினியின் 'எந்திரன்-2', 'தர்பார்' படங்களை லைகா தயாரித்திருப்பதால் சுபாஷ்கரனை நேரில் சந்தித்தார். அப்போது அவரிடம் 'நீங்க அடுத்து டைரக்ட் எப்போ பண்ணப்போறீங்க?' என சுபாஷ்கரன் கேட்டதோடு, படத்தை லைகாவே தயாரிக்க தயாராக இருப்பதாக சொல்ல, சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. இதுதான் நடந்தது'' என்கிறார்கள்.

ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த படத்தை லைகா தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. படத்தின் கதை த்ரில்லர் என்றும், சஞ்சீவ் என்பவர் எழுதுகிறார் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இது ஹீரோயின் சென்ட்ரிக் படமாம். அடுத்த வாரத்தில் கதை விவாதம் தொடங்க இருப்பதாகவும், அதனையடுத்தே, நடிகர்கள், டெக்னீஷியன்களின் தேர்வு இருக்கும் என்றும் சொல்கிறார்கள். ஜனவரியில் ஷூட்டிங் தொடங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

வாங்க டைரக்டர் வாங்க!



from தமிழ் சினிமா https://ift.tt/3F8IG4C
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*