`தினமும் 10,000 டன் நிலக்கரியை தரவேண்டும்!' - மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த செந்தில் பாலாஜி

0

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டெல்லியில் மத்திய மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்தார். அவருடன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு மின்பகிர்மான கழக இயக்குநர் மா.சிவலிங்கராஜன் ஆகியோரும் சென்றனர். செந்தில் பாலாஜி, தமிழக அரசின் சார்பில் 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மத்திய அமைச்சரிடம் அளித்தார்.

அந்த மனுவில், "2003 - ம் ஆண்டு மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு குறித்து, அதாவது , 237.63 லட்சம் டன் மத்திய அரசால் அனுப்பப்படவேண்டிய நிலையில், ஆண்டு ஒன்றுக்கு 171.10 லட்சம் டன் மட்டுமே வழங்கப்படுகிறது. முழுமையாக நிலக்கரி வழங்கி, உரிய அளவு மின்சாரத்தை பெறும் வகையில் (Tolling) நாள் ஒன்றுக்கு 10,000 டன் நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், ஒரிசா மாநிலத்தில், சந்திரபிலாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஒதுக்கீடு பெறுவதற்கு 30.03.2016 அன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

செந்தில் பாலாஜி - மின்னகம்

ஆனால், 66 மாதங்கள் கழிந்தும், அங்கு இன்னும் நிலக்கரி உற்பத்தி ஆரம்பிக்கப்படவில்லை. ஆகவே, இதற்கான ஒப்பந்த காலத்தினை நீட்டித்து தர வேண்டும். அதேபோல், மத்திய அரசின் நிதி நிறுவனங்களான PFC, REC, IREDA - ல் இருந்து பெறப்படும் கடன்களுக்கு வட்டி விகிதங்கள் 9.50 சதவிகிதம் முதல் 12.65 சதவிகிதமாக உள்ளது. இதனை ஒரே மாதிரியாக அனைத்து வகையான கடன்களுக்கும் 8.50 சதவிகிதமாக நிர்யணயம் செய்ய வேண்டும். அதோடு, RAPDRP - Part - B - க்கு உண்டான அனைத்து திட்டங்களும் முடிக்கப்பட்டுவிட்டன. மேற்படி, திட்டத்தில் Part - A - ல் உள்ள வேலைகள் ஒப்பந்ததாரர்களால் செய்து முடிக்காத காரணத்தாலும், நீதிமன்ற வழக்கின் காரணமாகவும் முடிக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, பகுதி A - விற்கான மானியத்தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, விளக்கமாக எடுத்துக்கூறி கடன்தொகையான (அதாவது, திட்டமதிப்பீட்டில் 50 சதவிகிதம்) ரூ. 1330.93 கோடியை மானியமாக மாற்றம் செய்து தர வேண்டும். மேலும், மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 8647 கோடியானது திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இல்லாததால், மானிய தொகையை ரூ. 12,000 கோடியாக உயர்த்தி தர வேண்டும்.

அதேபோல், மத்திய அரசின் மின்விநியோக நிறுவனத்தால் வசூலிக்கப்படும். சேவைக்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 7 பைசாவில் இருந்து 1 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும். அதோடு, ரைகார் - புகளூர் - திருச்சூர் - உயர்மின் வழிப்பாதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மின்வழிப்பாதையாக கருத்தப்பட வேண்டியும், மின்வழிப்பாதையில் உள்ள அனைத்து பயனாளர்களும் பயனடையும்படியும், நிதிச்சுமையை 720 கோடியில் இருந்து ரூ. 216 கோடியாக குறைத்து, ரூ. 504 கோடி சேமிப்பு செய்வதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அமைச்சரை சந்தித்த செந்தில் பாலாஜி

மேலும், மத்திய அரசின் மின் விநியோக கழகத்தின் மூலம் மின் கொள்முதல் செய்து வழங்க வேண்டிய, மீதமுள்ள 1,100 மெகாவாட் மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்கு வழங்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், நிலுவையில் உள்ள ரூ. 38.49 கோடி, மத்திய அரசின் நிதி உதவியினை MNRE - ல் இருந்து TEDA - விற்கு உடனடியாக வழங்க வேண்டும். அதேமாதிரி, மாநிலங்களுக்கு இடையேயான மின்பாதையை உபயோகப்படுத்த செலுத்த வேண்டிய தொகையில் உள்ள கணக்கீடு குறைவை நிவர்த்தி செய்து, TANGEDCO - விற்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 48 கோடி வரையில் கூடுதல் செலவு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மின் கொள்முதலுக்கு உத்தரவாதமாக வங்கி உறுதி கடிதம் (Letter Of Credit) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3F5tF3e
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*