புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்த காரணத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முடப்பட்டன. தொற்றின் தீவிரம் குறையத் தொடங்கியதையடுத்து இந்த ஆண்டு செப்டம்பர் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த 10-வது வகுப்பு படிக்கும் மாணவி நிஷா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) உடல் நிலை சரியில்லாத காரணத்தால், பள்ளி திறந்தபிறகும் பள்ளிக்குப் போகவில்லை என்று கூறப்படுகிறது.. அதனால் அந்த மாணவி படிக்கும் வகுப்பின் ஆசிரியர் அவரை கண்டித்ததுடன், தலைமை ஆசிரியரிடம் அனுப்பி வைத்திருக்கிறார். அவரும் கண்டித்ததுடன் படிக்க விருப்பமில்லை என்றால் டி.சி வாங்கிக் கொண்டு செல் என்று கூறியதாக கூறப்படுகிறது. அதில் மனமுடைந்த அந்த மாணவி வீட்டில் தூக்குபோட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாய் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நாள் இல்லத்தரசியாக இருக்கிறேன், எனக்கு ஒரு ஆண் பிள்ளை மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இரண்டாவது மகள் நிஷா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். கொரோனா காலமென்பதால் பள்ளிக்கு செல்லாமல் இருந்தாள். பள்ளி திறந்த பின்பும் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பள்ளிக்கு சிறிது காலம் போகாமல் வீட்டில் இருந்தாள். அதை தொடர்ந்து கடந்த 6.12.2021 திங்கள் கிழமை பள்ளிக்கு சென்ற நிஷா வாடிய முகத்துடன் வீட்டிற்கு வந்தாள். நான் என்னவென்று கேட்டேன் அதற்கு என் மகள் எதுவும் சொல்லவில்லை நாள் உடல் நிலை சரியில்லை என்று நினைத்து எதுவும் கேட்கவில்லை. இன்று (நேற்று 9.12.2011) மீண்டும் நான் வற்புறுத்தியதின் பேரில் பள்ளிக்கு சென்றாள்.
காலை சுமார் 10.20 மணியளவில் என் மகன் பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியை போன் செய்து பள்ளிக்கு வருமாறு கூப்பிட்டார்கள். அதன்பேரில் என் மகன் மேற்படி பள்ளிக்கு சென்றான். அப்போது என் மகள் நிஷா நிற்க கூட முடியாத நிலையில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது என் மகனுடன் நிஷா ஆசிரியையை சந்தித்தபோது “ஏன் பள்ளிக்கு வந்தாய், உன் விருப்பத்திற்கு எல்லாம் பள்ளி நடத்தவில்லை, விருப்பம் இருந்தால் படி இல்லை என்றால் டிசி வாங்கி கொள் என்று கூறி தலைமை ஆசிரியரை பார்க்கச் சொல்லி அனுப்பி விட்டார். அவர் என் மகனிடம், ”உன் தங்கைக்கு படிக்க விருப்பம் இல்லையா, ஏன் பள்ளிக்கு அனுப்பவில்லை. அவள் படிப்பது பத்தாம் வகுப்பு இப்படி பள்ளிக்கு வரவில்லை என்றால் படிப்பு பாதிக்கப்படாத உங்களுக்கு இஷ்டம் என்றால் படிக்க வையுங்க இல்லளனா டி.சி வாங்கிட்டு போய் விடுங்கள்” என்று சொன்னார்.
Also Read: நெல்லை 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை!- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
அதனால் நிஷாவை அழைத்துக்கொண்டு என் மகன் வீட்டுக்கு வந்துவிட்டான். நான் என்ன நடந்தது என்று என் மகளை கேட்டபோது அவள் எதுவும் சொல்லவில்லை பிறகு என் மகளிடம் கேட்ட போது மேற்படி பள்ளியில் நடந்தவற்றை அனைத்தையும் என்னிடம் சொன்னான். என் மகள் பாத்ரும் போவதாக சொல்லிவிட்டு சென்று நீண்ட நேரம் ஆகியும் வராததால் நான் சென்று கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகப்பட்டு பாத்ரூமை எட்டி பார்ததபோது ஜன்னலில் துப்பட்டாவால் தனக்குத் தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். அலறி சத்தம் போட என் மகன் வந்து பார்த்துவிட்டு அவளை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
அங்கிருந்த மருத்துவர் பரிசோதித்துவிட்டு என் மகள் இறந்து விட்டாள் என்று கூறி அங்கிருந்த சவக்கிடங்கில் பிரேதத்தை வைத்துவிட்டார்கள். மேற்படி என் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லியும், டி.சி வாங்கிக் கொண்டு போ என்று ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் கூறியதால்தான் மனமுடைந்து என் மகள் தற்கொலை செய்து கொண்டாள் என் மகளின் இறப்பிற்கு காரணம் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3Gw8TtN
via
