கடந்த 2020ல் அமேசான் தளத்தில் 'புத்தம் புது காலை' என்ற அந்தாலஜி படம் வெளியானது. 'இளமை இதோ இதோ', 'அவரும் நானும் அவளும் நானும்', 'காஃபி எனி ஒன்?', 'ரீயூனியன்', 'மிரக்கிள்' என்ற தலைப்புகளில் மொத்தம் ஐந்து கதைகள் வெளியானது. அதை இயக்குநர்கள் சுதா கொங்கரா, கௌதம்மேனன், சுஹாசினி, ராஜீவ்மேனன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் ஆகியோர் இயக்கியிருந்தனர். ஜெயராம், ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, பாபி சிம்ஹா என பலர் நடித்திருந்தனர்.
இப்போது 'புத்தம் புது காலை2' வரவிருக்கிறது. இதிலும் மொத்தம் ஐந்து கதைகள் என்கிறார்கள். இம்முறை 'சில்லுக்கருப்பட்டி' ஹலிதா ஷமீம், 'மாரி' பாலாஜி மோகன், மணிரத்னத்தின் உதவியாளர் ரிச்சர்டு ஆண்டனி, 'விக்ரம் வேதா' புஷ்கர், காயத்ரியின் உதவியாளர் சூர்ய கிருஷ்ணா, 'கேடி.கருப்பத்துரை' மதுமிதா ஆகியோர் இயக்கி வருகின்றனராம். முதல் பாகத்தைப் போலவே இதிலும் பரிட்சையமான முகங்களும், புதுமுகங்களும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறதாம்.
from தமிழ் சினிமா https://ift.tt/3FBeGhx
via Umn news Tamil
