"சசிகுமாருக்கு இது வேற கெட்டப், வேற ஜானர்; அவருக்கு வில்லனா விக்ராந்த்!"- `காமன்மேன்' சத்யசிவா

0

நடிகர் கிருஷ்ணாவுக்கு சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் 'கழுகு.' இந்தப் படத்தின் திரைக்கதை வடிவம், படம் பார்த்த ரசிகர்களை வாவ் சொல்ல வைத்தது. முக்கியமாக, இந்தப் படத்தின் வெற்றி, படத்தின் இயக்குநர் சத்யசிவாவுக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

தற்போது இயக்குநர் சத்யசிவா நடிகர் சசிகுமாரை ஹீரோவாக வைத்து 'காமன்மேன்' எனும் படத்தை எடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், டீசரும் சமீபத்தில் வெளியாகின.

காமன்மேன்

டீசரில் சசிகுமாரின் கெட்டப்பும் சண்டைக் காட்சிகளும் கவனம் ஈர்த்தன. எப்போதும் குடும்பப்பாங்கான கதைகளை செல்கட் செய்யும் சசிகுமார் இந்த முறை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லரில் இறங்கியிருப்பது தெரிய வருகிறது. சசிகுமாரின் 21-வது படமான இதில் கன்னட நடிகை ஹரிப்ரியா நடித்திருக்கிறார். தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் படம் இது. படத்துக்கான இசையை ஜிப்ரான் அமைத்திருக்கிறார். படம் குறித்தும், சசிகுமாரின் கதாபாத்திரம் குறித்தும் பேசுகிறார் இயக்குநர் சத்யசிவா.

சத்யசிவா

"இதுவரைக்கும் சசிகுமார் சார் வில்லேஜ் சப்ஜெக்ட் படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறார். 'காமன்மேன்' படம் சசிகுமாருக்கு வேறொரு அடையாளத்தைக் கொடுக்கும். காமன்மேன் ஒருவரைப் பற்றிய கதை. எதார்த்தமான கதையா சசிகுமாருக்கு இருக்கும். படத்தோட கதை எழுதி முடிச்ச உடனே தயாரிப்பாளர் கிட்ட சசிகுமார்தான் இந்த கேரக்டருக்கு சரியா இருப்பார்னு சொல்லி கால்ஷீட் வாங்கிப் படம் பண்ணினேன். படத்தோட நெகட்டிவ் கேரக்டர்ல விக்ராந்த் நடித்திருக்கார்" என்றார்.



from தமிழ் சினிமா https://ift.tt/32IWAvt
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*