புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தவர் ராஜகோபால். இவர் பயிர்க்கடன் வாங்க வரும் விவசாயிகளைத் தொடர்ந்து அவமதித்ததாகவும், அவர்களைத் தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதாகவும் விவசாயிகள் தரப்பிலிருந்து புகார் எழுந்தது. இதற்கிடையே தான், தகுதியான விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் வழங்கக் காலம் தாழ்த்தி வந்ததோடு, தனக்கு வேண்டியவர்களுக்கு உடனடியாக பயிர்க்கடன் கிடைக்க வழிவகை செய்து முறைகேட்டிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் தான், இதுபற்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள் அவரின் உயர் அலுவலர்களிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில், கூட்டுறவுச் சங்க மண்டல இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் ராஜகோபால் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜகோபாலை சஸ்பெண்ட் செய்து மண்டல இணைப்பதிவாளர் உமா மாகேஸ்வரி உத்தரவிட்டார். விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் விவசாயிகளிடம் அதிகாரி கடுமையாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3pMwnnE
via
