தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய தாலுகாக்களில் மானாவாரி விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. உளுந்து, பாசி, கம்பு, சோளம், மக்காசோளம், மிளகாய், பருத்தி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை மானாவாரியாக பயிரிட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு ரபி பட்டத்தில் பருவமழை பொய்த்துப் போன காரணத்தால், இரண்டாவது முறையாக விதைப்பு செய்தனர். ஆனால், பயிர்கள் கருகிப் போயின. மீண்டும் மூன்றாவது முறையாக பருவமழையை நம்பி விதைத்தனர். பரவலாகப் பெய்த மழையால் பயிர்கள் முளைத்து வளரத் தொடங்கின.
Also Read: இறைச்சிக்காக ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட கழுதைகள்; விரட்டி பிடித்த வேலூர் போலீஸ்; நடந்தது என்ன?
ஒரு அடி உயரத்திற்கும் மேல் வளர்ந்த பயிர்களுக்கு இடையில் விவசாயிகள், களையெடுப்புப் பணிகளைச் செய்து வந்தனர். இந்த நிலையில், தொடர்ச்சியாகப் பெய்த மழையினால் பயிர்களுக்கு இடையில் மழை நீர் தேங்கியது. இதில், பல இடங்களில் மழை நீர் தேங்கி நின்ற இடங்களில் வடிகால்களோ, தாழ்வான பகுதிகளில் பாலங்களோ இல்லை. இவற்றைச் சீரமைக்க வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை எனப் புலம்புகிறார்கள் விவசாயிகள். மழைநீர் வழிய வழியில்லை என்பதால், தேங்கி நின்ற மழைநீர் வளர்ந்து நின்ற பயிர்கள் மிதந்தும், அழுகியும் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் தூத்துக்குடியை மழை பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி அழுகிய பயிர்களுடன் காங்கிரஸ் கட்சியினர், கோவில்பட்டி கோட்டாட்ச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோட்டாட்டச்சியர் சங்கர நாராயணனிடம் மனு அளித்தனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அய்யலுசாமி, ``தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாசமாவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
Also Read: நீர்நிலை ஆக்கிரமிப்பு: ``சும்மா உட்காரவா ஊதியம்?" - அதிகாரிகளை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்
1,79,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பாசி, உளுந்து, கம்பு, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் உள்ளிட்ட அனைத்து பயிர்களுமே மழைநீரில் அழுகி கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளன. மாவட்டத்தில் பல பகுதிகளில் விவசாயிகள், மூன்று முறை விதைப்பு செய்துள்ளனர். இதனால், ஒரு ஏக்கருக்கு ரூ.60,000 வரை நஷ்டமாகியுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தை மழையால் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். முற்றிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஒரு ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணத் தொகையாக வழங்கிட வேண்டும்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3DU6YOd
via
