சமீபத்தில் விஜய்- யுவன் ஷங்கர் ராஜா திடீரென சந்தித்து கொண்டனர். அதை யுவன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட கோடம்பாக்கமே இவர்களது கூட்டணியை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது. இந்த திடீர் சந்திப்பின் பின்னணி என்ன என்பதை விசாரித்தோம்.
2003-ம் ஆண்டில் விஜய் நடித்த 'புதிய கீதை' என்ற படத்திற்கு யுவன் இசைமைத்திருக்கிறார். அப்போது அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததாலும், தேதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் மீண்டும் அதே கூட்டணி அமையாமல் போனது. விஜய்யின் படங்களுக்கு தேவா, வித்யாசாகர், மணிசர்மா, ஏ.ஆர்.ரஹ்மான் எனப் பலர் தொடர்ந்து இசையமைத்தனர்.
இதனிடையே சமீப காலமாகவே யுவனின் பாடல்கள் விஜய்யின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய்யின் ப்ளே லிஸ்ட்டில் யுவனின் பல பாடல்கள் இடம்பெறவே, யுவனைக் கூப்பிட்டு வாழ்த்த வேண்டும் என நினைத்திருக்கிறார் விஜய்.
அப்போது 'மாஸ்டர்', 'பீஸ்ட்' என பிஸியானதால், இந்தச் சந்திப்பு தள்ளிப் போய்க்கொண்டே வந்தது. இந்தச் சூழலில் 'பீஸ்ட்'டை முடித்துவிட்டு ரிலாக்ஸாக இருந்த விஜய், யுவனிடம் பேசியிருக்கிறார். அதன்பிறகே அடையாரில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்திருக்கிறார் யுவன். இருவரும் அரை மணி நேரம் மனம் விட்டு பேசியுள்ளனர்.
"ஃப்யூச்சர்ல நாம ஒர்க் பண்றோம்" என விஜய்யிடம் இருந்து க்ரீன் சிக்னலும் வந்திருக்கிறது. அது விஜய் 67 ஆகவோ அல்லது விஜய் 68 ஆகவோ இருக்கலாம் என்கிறார்கள். விஜய், இன்னும் சில நாள்களில் 'பீஸ்ட்' படத்திற்காக டப்பிங் பேசவிருக்கிறார். இதனையடுத்து, வம்சியின் இயக்கத்தில் தனது 66-வது படத்திற்கு ரெடியாகிறார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
from தமிழ் சினிமா https://ift.tt/3mAsrWk
via Umn news Tamil
