வெற்றி பெற்ற வாசலிலேயே உயிரைவிட்ட விஜயகாந்த் பட இயக்குநர் எம்.தியாகராஜன்!

0

மாநகர காவல்,பொண்ணு பார்க்கப்போறேன், வெற்றி மேல் வெற்றி முதலிய படங்களை இயக்கிய எம்.தியாகராஜன் இன்று காலை மரணமடைந்தார். அநாதரவான நிலையில் ஏவி.எம்.ஸ்டுடியோவிற்கு எதிரில் இறந்துகிடந்தார். நீண்ட நேரமாக அவர் அப்படி கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து பார்த்து விசாரித்தபோது தான் அவர் தியாகராஜன் என்பது தெரியவந்தது. விஜயகாந்த் நடித்த 150 வது படத்தை யார் டைரக்ட் செய்வது என பலர் பரிசீலிக்கப்பட்டபோது விஜயகாந்த் தேர்ந்தெடுத்தது இவரைத்தான். படம் மாபெரும் வெற்றிபெற்று அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதற்கு பிறகு அவர் இயக்கிய இரண்டு படங்கள் அது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை.

தியாகராஜன்

அதற்கு பிறகு சொந்த ஊருக்குப் போனவர் மீண்டும் வாய்ப்புத் தேடி சென்னை வந்தார். சரியான வாய்ப்புகள் கைவராத சூழலில் வடபழனியில் வாடகை தர முடியாததால் நண்பர்களின் தயவில் வசித்து வந்தார். பெரும்பாலான நேரங்களில் வாய்ப்புத் தேடுவதே அவர் வேலையாக இருந்திருக்கிறது.கொரோனா சூழ்நிலையில் பொருளாதார நிலை மேலும் மோசமாக, அவர் உடல் நிலை பலவீனமானது. இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமான காரணத்தால் இன்று இறந்தார். அவரது இறப்புச் செய்தி கேட்டு இயக்குநர் சங்கம் வருத்தம் தெரிவித்திருக்கிறது. மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல் சூழலுக்கு ஏற்ப அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படலாம் என்கின்றனர்.



from தமிழ் சினிமா https://ift.tt/3GnLCdn
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*