மதுரை மாவட்டத்தில் தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள் உலகம் முழுவதும் பிரபலமானது. அதனால்தான் அதற்கு மத்திய அரசால் 2005-ல் புவிசார் குறியீடு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இச்சேலைகளுக்கான ஜி.எஸ்.டியை 12 சதவிகிதமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளதால் இவற்றை உற்பத்தி செய்யும் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Also Read: "என் உயிர் கைத்தறி தொழிலோடுதான் முடியவேண்டும்!" - கலங்கும் கரூர் கைத்தறி நெசவாளர்!
இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில், ``மதுரையின் அடையாளங்களில் சுங்குடி சேலைகளுக்குத் தனித்த இடமுள்ளது. முக்கியமாக மொழிச் சிறுபான்மையினரான சௌராஷ்டிரா சமூக மக்கள், பாரம்பர்யமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கை கட்டு வடிவமைப்பு, மெழுகு பிரின்ட் வடிவமைப்பு, ஸ்கீரின் பிரின்ட் வடிவமைப்பு, சாயமிடுதல், சலவை செய்தல் போன்ற பணிகள் இத்தொழிலில் உள்ளன. 10,000 குடும்பங்கள் இத்தொழிலை நம்பியுள்ளன.
அடித்தட்டு மக்கள் விரும்பும் உடையான சுங்குடி சேலைகள் தயாரிக்கும் தொழில் 1995-ல் குடிசைத் தொழிலாக அங்கீகரிக்கபட்டது.
சிறப்பான, நேர்த்தியான இச்சேலைகளுக்கு 2005-ல் புவிசார் குறியீடு வழங்கி ஒன்றிய அரசு கெளரவித்துள்ளது. இத்தகு பெருமை வாய்ந்த சுங்குடி சேலைகள் தயாரிக்கும் தொழில், ஒன்றிய அரசின் வரி விதிப்புக் கொள்கையால் பாதிப்பிற்கு உள்ளாக உள்ளது.
முற்றிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டிய இத்தொழிலுக்கு 2017-ல் 5 சதவிகித வரி விதித்தது ஒன்றிய அரசு. தற்பொழுது 12 சதவிகிதமாக உயர்த்தி, அது ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாகும் என்று ஆணை பிறப்பித்துள்ளது.`முதலீடு செய்யுங்கள், லாபத்தைப் பங்கிட்டு கொள்ளலாம்!'- விவசாயம் செய்வதாகக் கூறி கோடிக் கணக்கில் மோசடி
Also Read: 3 மகன்களையும் ராணுவத்துக்கு அனுப்பிய நெல்லை பெண்; `வீரத்தாய்’ விருது கொடுத்து கௌரவித்த ராணுவத்துறை!
எளிய மக்களை பாதிக்கும் இவ்வரி உயர்வை உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் சு.வெங்கடேசன்.
மத்திய அரசு இந்த வரி உயர்வை திரும்பப் பெறவில்லை என்றால் போராட்டம் நடத்தத் தயாராகி வருகிறார்கள் சுங்குடி சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3s8HiuU
via
