கோவை சரவணம்பட்டி அருகே 14 வயது மாணவியின் சடலம் கை கால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி மாயமான மாணவியை யார் கொலை செய்தார்கள் என்று போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக மாணவியின் தாய், அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் முத்துக்குமார் ஆகியோரிடம் போலீஸார் நேற்று முதல் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் முத்துக்குமார் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியிருக்கிறார். மாணவியின் தாய் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து விட்டார். கட்டட வேலை செய்து வரும் அவருக்கு, இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
Also Read: கோவை: முட்புதரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி சடலம் - போலீஸ் தீவிர விசாரணை!
முதல் மகள் வேலைக்கு சென்றுவரும் நிலையில், இரண்டாவது மகள் அருகில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர்தான் மாயமாகியிருந்தார். இதனிடையே, மாணவியின் தாய்க்கும், முத்துக்குமாருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனால், முத்துக்குமார் அந்தப் பெண்ணுக்கு தங்க நகைகளை கொடுத்திருக்கிறார். அதைத் திருப்பி கேட்டபோது, இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அந்தப் பெண் நகை தன் மகளிடம் இருப்பதாகவும், அவர் தர மறுக்கிறாள் என்றும் கூறியிருக்கிறார்.
அதனால், முத்துக்குமார் மாணவியை தன் வீட்டுக்கு அழைத்து பேசியிருக்கிறார். நகையை கேட்டு தகராறு செய்திருக்கிறார். மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்திருக்கிறார்.
ஆனால், இந்தத் தகவலை எல்லாம் மறைத்து, பெண்ணின் குடும்பத்துடன் சேர்ந்து மாணவியை தேடுவது போலவும், காவல்துறையில் புகார் அளிக்கவும் முத்துக்குமார் உதவி செய்திருக்கிறார். முத்துக்குமார் மீது ஆதாயக் கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
அவரிடமிருந்து 4.25 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது உடற் கூராய்வு முடிவில்தான் தெரியவரும் என்று போலீஸார் கூறுகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3q3ReDb
via
