`பீஸ்ட்' அப்டேட்: "விஜய் போர்ஷன் முடிந்தாலும் படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது!"

0
இன்னும் பத்து நாள்கள் படப்பிடிப்போடு விஜய்யின் 'பீஸ்ட்' படப்பிடிப்பு நிறைவடைகிறது. முன்னதாக சில நாள்களுக்கு முன்னர் படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவின் போர்ஷன் முழுவதும் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து விஜய்யின் போர்ஷனும் நேற்றுடன் நிறைவடைந்திருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் ஆரம்பித்து தொடர்ந்து சென்னையில் நடந்து வருகிறது. நூறு நாள்களைத் தாண்டி நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சமீபத்தில் விஜய், பூஜா ஹெக்டே இடம்பெறும் டூயட் பாடல் படமாக்கப்பட்டது. அத்துடன் பூஜா ஹெக்டேவின் போர்ஷன் நிறைவடைந்தது. "இது விஜய்யின் படமாகவும், நெல்சனின் படமாகவும் இருக்கும்" என பூஜா ஹேக்டே ஆவலைத் தூண்டிவிட்டு போயிருக்கிறார்.

பூஜா ஹெக்டே

கடைசி பாடல் ஷூட் முடிந்ததும் விஜய்யின் ஃபைட் சீக்குவென்ஸ்களுக்கான பேட்ச் ஒர்க்கும் நடந்து முடிந்தது. இந்நிலையில் 'பீஸ்ட்' வட்டாரத்தில் விசாரித்தால், "விஜய்யின் போர்ஷன் நிறைவடைந்தாலும், மற்ற நடிகர்களின் கால்ஷீட்கள் இப்போதுதான் அமைந்துள்ளதால் அவர்கள் பங்கு பெறும் ஒருசில காட்சிகள் படமாக்க வேண்டியிருக்கின்றன. அத்துடன், பேட்ச் ஒர்க் வேலைகளும் படமாக்கப்பட்டதும், விஜய் டப்பிங் பேசவிருக்கிறாராம். வரும் கிறிஸ்துமஸுக்கு முன்னர் 'பீஸ்ட்'டின் டப்பிங்கையும் விஜய் முடித்து கொடுத்துவிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து 'விஜய் 66' படத்திற்கான லுக் டெஸ்ட்டுகளில் பங்கேற்கிறாராம் விஜய்.



from தமிழ் சினிமா https://ift.tt/3EPVrRh
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*