தென்காசி: பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட காவலர்! - வைரலாகும் வீடியோ

0

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வருபவர், ராஜகுரு. அவரை பாதுகாப்புப் பணிக்காக திருமலாபுரம் பகுதிக்கு இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்துள்ளார். அங்கு செல்லும் வழியில் சேர்ந்தமரம் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையைப் பார்த்ததும் உள்ளே நுழைந்துவிட்டார்.

Also Read: `காரில் கைப்பையைக் களவாடிய ஊர்க்காவல் படைக் காவலர்?!’ - வைரல் வீடியோவும் போலீஸ் விளக்கமும்!

மதுக்கடையில் நன்றாகக் குடித்து முடித்த காவலர் ராஜகுரு, கையில் ஒரு பீர் பாட்டிலுடன் வெளியே வந்திருக்கிறார். காவலர் சீருடையுடன் கையில் பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு காவலர் தள்ளாடியபடி நிற்பதை அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மது போதையில் இருந்த காவலர் ராஜகுரு, சாலையில் செல்வோரை வம்புக்கு இழுத்து தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார். அதைத் தட்டிக் கேட்ட பொதுமக்களை மிரட்டும் வகையில், ‘நான் யார் தெரியுமா? என்னை எவனும் எதுவும் செய்ய முடியாது’ என்று சண்டைக்குச் சென்றுள்ளார்.

வைரலாகும் காவலர் வீடியோ

மது போதையில் அவர் செய்யும் செயல்களையும் பொதுமக்களை மிரட்டுவதையும் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் வீடியோ பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காவலர் ஒருவர் சாலையில் போதையில் நின்றபடி மிரட்டி வருவது தொடர்பாக ராஜ் என்பவர் சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன், காவலர் ராஜகுருவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

பொதுமக்களிடம் வாக்குவாதம்

காவலர் ஒருவர் சீருடையில் பொது இடத்தில் பீர் பாட்டிலுடன் நின்று பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவத்தை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்த்துச் சென்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/30pWg4f
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*