சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; சஸ்பெண்ட் செய்யப்பட்ட மதுரை அரசு மருத்துவர்!

0

ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் டாக்டர் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சமீபத்தில் ஸ்கேன் எடுக்க வந்த இளம்பெண்ணிடம், மறுநாளும் பரிசோதனைக்கு வரவேண்டும் என்று ரேடியாலாஜி மருத்துவர் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

மறுநாள் அந்தப் பெண்ணும் செல்ல, அவரை மட்டும் ஸ்கேன் அறைக்குள் இருக்கச் சொல்லிவிட்டு உடன் சென்ற அவர் அம்மாவையும், அங்கு பணியிலிருந்த நர்ஸையும் வெளியில் இருக்கச் சொல்லியுள்ளார் டாக்டர் சக்கரவர்த்தி.

ராஜாஜி மருத்துவமனை

Also Read: ``98 வயதிலும் அவங்க மருத்துவமனையை மறக்கலை!" - சாரதா மேனன் நினைவுகள் பகிரும் மருத்துவர்கள்

பரிசோதனை செய்வதாகச் சொல்லி அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். இதை உணர்ந்து கொண்ட அப்பெண் உடனே அறையை விட்டு வெளியில் வந்து தன் தாயிடம் சொல்லி அழுதிருக்கிறார். அதிர்ச்சியான தாயும் அவரும், இதைப் பற்றி அங்கு யாரிடமும் தெரிவிக்காமல் அத்துறையின் தலைமை மருத்துவரிடம் சென்று புகார் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு பதறிய துறைத்தலைவர், டீன் ரத்தினவேலுவிடம் புகார் செய்ய, அவர் உடனடியாக விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். டாக்டர் சக்கரவர்த்தி மீதான புகார் உண்மை என உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தகவல் இப்போது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டாக்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, சஸ்பென்ஷன் மட்டும்தானா என்றும் கேட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தோம். ``பாதிக்கப்பட்ட பெண் எங்களிடம் நேரடியாகச் சொன்ன புகாரின் அடிப்படையில் உடனடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அதற்கு அவர் தயக்கம் காட்டுகிறார். அவர் உறுதியாக இருந்தால்தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். இந்தச் சம்பவம் பற்றி காவல்துறையினர் அப்பெண்ணுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் தேடிச் சென்று புகார் பெற்று நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது" என்கிறார்கள்.

டாக்டர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டும் போதாது, கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் 7-ம் தேதி ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

Also Read: `அபார்ஷன் பண்றதுக்கு முன்னாடி இந்த விஷயங்களையும் யோசிங்க!' - `பேச்சுலர்'கள் கவனத்துக்கு

நம்மிடம் பேசிய மாதர் சங்க நிர்வாகி சசிகலா, ``மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் பெண்கள் தொடர்ச்சியாக பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள். தமிழக அரசும் மருத்துவ கவுன்சிலும் இணைந்து மருத்துவமனையில் ஆய்வு நடத்தி, பாலியல் அத்துமீறல் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தற்போது இந்த பிரச்சனை வெளியில் பரவி வருவதால் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது காவல்துறை சட்டப்படியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

கடவுள்களாக டாக்டர்கள் பார்க்கப்படும் சமூகத்தில் இதுபோன்ற சாத்தான்களும் வாழ்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/31FiNdE
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*