"இதோ புறப்பட்டு வர்றேன்!" - மருத்துவமனையிலிருந்து உற்சாக வடிவேலு! #VikatanExclusive

0

வைகை புயல் வடிவேலு கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது யாவரும் அறிந்ததே. அவர் நலமும் திரும்ப ரசிகர்கள், திரைத்துறையினர் தங்களது வாழ்த்தையும், பிராத்தனைகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில், மருத்துவமனையிலிருக்கும் வடிவேலுவிடம் அலைபேசி வழியாகப் பேசினோம். அதே துள்ளல் குரலில் "அண்ணே... ரொம்ப நல்லா ஆயிட்டேன். அய்யனார் குலதெய்வமா என் தலைமாட்டில் நிற்கும்போது ஒரு பயமும் இல்லை. குட்டியா இருமல் இருந்துச்சு இப்ப குணமாகிவிட்டது. எபெக்ட் 1.2% தான் இருக்கு... சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம். என்ன மாமா... பல செய்திகள் சொல்றாங்கன்னு பொண்டாட்டி போன் போட்டுச்சு.

வடிவேலு

அட, ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட்டேன். வீட்டுக்குப் போய்ட்டு 5 நாள் ரெஸ்டை போட்டால் படப்பிடிப்புக்கு கிளம்பிடலாம். இங்கே வந்ததும் முதல்வர் ஸ்டாலின் அய்யா போன் பண்ணி, எதுக்கும் கவலைப்படாதீங்க வடிவேலு. நாங்க இருக்கோம்னு சொன்னார். அப்படியே மனசு குளிர்ந்து போச்சு."அய்யா... நீங்க சொன்னதே சந்தோஷமா இருக்கு. உங்க அம்புட்டு வேலையிலும் போன் பண்ணி பேசுறீங்க அய்யா. உங்களுக்கு வணக்கம்னு சொன்னேன். அமைச்சர் மா.சு பேசினார். ஆர்.எஸ்.பாரதி அண்ணே பேசினார். அப்புறம் தமிழகமே நம்ம பக்கம் இருக்கும்போது இதோ புறப்பட்டு வர்றேன்" என சந் தோஷமாகப் பேசினார் வடிவேலு.



from தமிழ் சினிமா https://ift.tt/32rJMKk
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*