* பாதிக்கும் மேல் முடிவடைந்திருந்த 'கண்ணை நம்பாதே' படத்தை மறுபடியும் ஆரம்பித்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின். கைவசம் இருக்கும் மு.மாறன், மகிழ்திருமேனி. மாரி செல்வராஜ் படங்களை முடித்து விட்டு `நெஞ்சுக்கு நீதி' படத்தை ரீலீஸ் செய்துவிட்டு உடனே தீவிர அரசியலில் இறங்கப்போகிறாராம் உதயநிதி. அதற்கான முனைப்பில்தான் படங்களை முடிக்கிறார் உதயநிதி. அரசியலுக்கு நீதி
* வலிமை சொன்னபடி வெளியாகாமல் போனதில் அதிகம் வருத்தமடைந்தது தயாரிப்பாளர் இல்லையாம் அஜித் தானாம். எப்போதும் தனது அடுத்த படத்தை ஆரம்பிக்கும்போது முந்தைய படம் வெளியாகியிருக்க வேண்டும் என அஜித் விரும்புவாராம். அது மிஸ் ஆனதில் சற்று வருத்தமாம். எப்போது வந்தாலும் படம் வெற்றி என்ற நம்பிக்கையில் உறுதியாக இருப்பதால் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நிம்மதியாக இருக்கிறார். அடுத்த பட ஸ்க்ரிப்ட்டில் படு தீவிரமாக இறங்கிவிட்டார் ஹெச்.வினோத். வலிமை அளவற்ற வலிமை இதுவே இப்போதைய தேவை
*விஜய்க்கும், அப்பா எஸ்.ஏ.சிக்கும் ரொம்ப நாளாக மனத்தாங்கல் ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பது தெரிந்ததுதான். இப்போது எஸ்.ஏ.சி இதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். மகனுக்கும் தனக்குமான பஞ்சாயத்தை ரஜினி காந்த் வசம் சொல்லி சமரசம் செய்ய முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். பச்சைக்கிளி... பஞ்சாயத்தை முடி!
* அடுத்த படத்தின் சம்பளம் இந்தப் படத்தால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் முந்தைய படத்தை புகழ்ந்து சொன்னாராம் ரஜினி காந்த். இதைக் கேட்ட பலரும் அப்செட்டில் இருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க அடுத்த படத்திற்காக உடல் நிலையைத் தயார்படுத்த நல்ல ஓய்வில் இருக்கிறார். கெட்டபய சார் இந்தக் காளி
*பொன்னியின் செல்வன் படத்திற்காக உதவி இயக்குநராக மணிரத்னத்திடம் வேலை பார்த்து நல்ல பெயர் வாங்கியிருக்கிறார் அஜிதன். இவர் வேறு யாரும் அல்ல. எழுத்தாளர் ஜெயமோகனின் மகன்தான். தத்துவம் படித்துவிட்டு சினிமாவில் இறங்கிவிட்டார் அஜிதன். ஆக, எழுத்தாளர் குடும்பத்திலிருந்து இப்போது இயக்குநர் வந்துவிட்டார். ஜெயமோகனின் செல்வன்
from தமிழ் சினிமா https://ift.tt/3pZFToR
via Umn news Tamil
