இரண்டு பெண்கள்... இரண்டு குழந்தைகள்... | உலக சினிமா #MyVikatan

0
WORLD CINEMA | Parallel Mothers | Madres paralelas | 2021 | Spanish | 123 min |

வெனிஸ் திரைப்பட விழாவில், இப்படத்தின் தொடக்க இரவு உலக பிரீமியரில் பார்வையாளர்களிடமிருந்து ஒன்பது நிமிட நின்று கைதட்டல் பெற்றதிலிருந்தே இதன் சிறப்பைப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு பொது இடத்தில் முன்பின் அறிமுகம் இல்லாத இருவர் சந்திப்பது அவர்களை எந்த எல்லைக்குக் கொண்டு செல்லும்? அதிகபட்சம் ஒரு காபி? ஓர் உரையாடல்? ஆனால், உலகப் புகழ்பெற்ற

இயக்குநர் பெட்ரோ அல்மோடோவர் இதுபோன்றதொரு சந்திப்பை எதுவரை கொண்டு செல்கிறார் என்பதை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது. இப்படி சாத்தியமான அசாத்தியங்களை பெட்ரோ அல்மோடோவர் 2021-ம் ஆண்டில் அளித்திருக்கும் Parallel Mothers படத்தில் காணலாம். இந்தப் படத்தில் அவர் சில பழைய வரலாற்றுப் புத்தகங்களையும் தூசு தட்டுகிறார். ஆனால், அதுவும் நிச்சயமாகச் சுவாரஸ்யமானதே.

இரண்டு சிங்கிள் பெண்கள்... ஜானிஸ் மற்றும் அனா... அவர்கள் பிரசவிக்கப் போகும் மருத்துவமனை அறையில் சந்திக்கின்றனர். இருவரும் தற்செயலாகக் கர்ப்பம் அடைந்தவர்கள். ஜானிஸ், நடுத்தர வயதுப் பெண். இப்படி கர்ப்பம் ஆனதற்காக அவள் வருத்தப்படவில்லை. மகிழ்ச்சியாகவே இருக்கிறாள். மற்றொரு பெண் அனா ஓர் இளைஞி. சற்று பயப்படுகிறாள். அவளை ஊக்குவிக்க முயற்சிக்கிறாள் ஜானிஸ். ஆஸ்பத்திரியில் இருக்கும் சில மணிநேரங்களில் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் சில வார்த்தைகள் இருவருக்கும் இடையே மிக வலுவான பிணைப்பை உருவாக்குகிறது. இது இருவரின் வாழ்க்கையையும் மாற்றும் வகையில் தீர்க்கமான முறையிலும் சிக்கலானதாகவும் உருவாகியிருக்கிறது.

Parallel Mothers

படத்தின் மற்றொரு பகுதி... உண்மையில் அது மிக முக்கியமான ஒன்று. கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்படாதவர்களைத் தேடுவதுதான் அது. அவர்களின் குடும்பத்தினர் மிகவும் தீவிரமாக விரும்பிய நல்லடக்கத்தை வழங்குவதற்கான தவிப்பு தெளிவாக வெளிப்படுகிறது. இதன் மூலம் மூதாதையர்கள் மற்றும் வேர்கள்பற்றிய கேள்விகள் தொடர்ந்து எழுந்தாலும், இந்த இரண்டு கதைக்களங்களும் உண்மையில் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் கணிப்பது கடினம்.

அல்மோடோவரின் வேறுபல படங்களைப் போலவே, இதிலும் பெனலோப் க்ரூஸ், தான் ஓர் அற்புதமான நடிகை என்பதை நிரூபிக்கிறார்.

இந்தப் படத்தில் ஒரு சர்ச்சையும் உண்டு. பாலூட்டும் முலைக்காம்புடன் கூடிய அதன் திரையரங்கு வெளியீட்டு போஸ்டர், நிர்வாணம் தொடர்பான விதிகளின் காரணமாக Instagram-லிருந்து அகற்றப்பட்டது. இந்த முடிவு 'free the nipple' இயக்கத்தால் விமர்சிக்கப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் மன்னிப்பு கேட்டது.

இந்த ஆண்டின் சென்னை சர்வதேச திரைப்பட விழா 2021 டிசம்பர் 30 அன்று தொடங்கி 2022 ஜனவரி 6 வரை நடைபெறுகிறது. 8 நாள்கள் நீடிக்கும் இந்தத் திரைத் திருவிழாவின் படங்களை சத்யம் வளாகம் மற்றும் அண்ணா திரையரங்கில் கண்டு களிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: https://ift.tt/3mQbDdZ


from தமிழ் சினிமா https://ift.tt/3JGFKyo
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*