கோவை: வாகனம் மோதியது தொடர்பாக தகராறு... கொலைவெறி தாக்குதலில் ஒருவர் கொலை! - போராட்டம், பதற்றம்

0

கோவை சூலூர் அருகே உள்ள பொன்னாகானி பகுதியைச் சேர்ந்தவர் ராமு என்கிற கேசவன். பட்டியல் இனத்தைச் சேர்ந்த கேசவன், தினக்கூலியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பணி முடிந்து பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

கோவை

பனப்பட்டி அருகே வரும்போது, அதே பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரியான மயில்சாமி என்பவரின் பைக்கும் கேசவன்னின் பைக்கும் மோதியுள்ளது. இதில் மயில்சாமியின் பால் சாலையில் கொட்டியது.

கேசவன் அங்கிருந்து அவசரமாக சென்றுவிட, இரவு அவர் வீட்டுக்கு 10-க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். ``வாகனத்தை இடித்துவிட்டு மன்னிப்பு கூட கேட்க மாட்டாயா?” என்று கேசவனிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியுள்ளது.

கேசவன்

குடிசைகள் சூறையாடப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர், கேசவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. கிராமம் முழுவதும் கலவர பதற்றம் தொற்றிக் கொண்டது. கேசவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீஸார் இரண்டு தரப்பிலும் வழக்குப்பதிந்து, 7 பேரை கைது செய்திருந்தனர். மேலும், பாதுகாப்புக்காக அந்த கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

போராட்டம்

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேசவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேசவன் மரணத்துக்கு நீதி கேட்டு, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/5HYa0vc
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*