திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தம்பதி சண்முகராஜ் -.கற்பகம். சண்முகராஜ் அங்குள்ள ஓர் கோழிப்பண்ணையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். கற்பகம் பின்னாலடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்தத் தம்பதியின் ஒரே மகளான ஹர்த்திகா (17), அருகில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல காலை பள்ளிக்கு சென்று, மாலை வீடு திரும்பியுள்ளார்.
சிறிது நேரத்தில் கற்பகமும் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது சமையலறையில் ஹர்த்திகா கழுத்து அறுபட்டிருந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே ஹர்த்திகாவின் உயிர் பிரிந்துவிட்டது. இது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாணவியின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் எஸ்.பி ஷசாங்க் சாய் உள்ளிட்டோர் நேரடியாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். “ஹர்த்திகாவை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உறுதியாக சொல்ல முடியும். அதேநேரத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஏதும் கொடுக்கப்படவில்லை என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமையல் அறையில் இருந்து, ரத்த கறையுடன் ஓர் கத்தியை பறிமுதல் செய்துள்ளோம். ஆறு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம்.” என்று போலீஸார் கூறியுள்ளனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/lJYjPuU
via
