மீண்டும் ரெய்டு வளையத்தில் எஸ்.பி வேலுமணி... 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

0

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை முதல் 58 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது வரை கோவை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 58 இடங்களில் சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. அதாவது, சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கல், கிரிஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், திருப்பத்தூர் மாவட்டத்துல் 2 இடங்களிலும் கோவையில் 41 இடங்களிலும் கேரள மாநிலத்தில் ஒரு இடத்திலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.

வழக்கு

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை முதல் மீண்டும் சோதனை செய்து வருகிறார்கள். மேலும் அவர் தொடர்புடைய இன்னும் சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எஸ்.பி வேலுமணியின் அண்ணன் அன்பரசன், அன்பரசன் மனைவி ஹேமலதா, நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சென்னை, கோவை, திருப்பூர், சேலம், கேரளா உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

வேலுமணி

இது தவிர்த்து சேலத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் 3 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான புகார்கள் காரணமாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று சென்னையில் போக்குவரத்துக்கு துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை திடீர் சோதனை நடத்தியதும், அதில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடதக்கது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/I3ngR9m
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*