இனி அதை நான் பண்ணவே மாட்டேன் - மறைந்த தன் தோழியால் யாஷிகா எடுத்த திடீர் முடிவு.
இனி இது ரெண்டையும் நான் பண்ணவே மாட்டேன் – மறைந்த தன் தோழியால் யாஷிகா எடுத்த நல்ல முடிவு.
தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர்.
இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.
யாஷிகாவிற்கு ஏற்பட்ட விபத்து :
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது.
குற்ற உணர்வில் யாஷிகா :
இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. விபத்தில் இருந்து மீண்டாலும் தன்னால் தான் தன் தோழி இறந்தார் என்று குற்ற உணர்வில் இருந்து வருகிறார் யாஷிகா. தற்போது உடல் நலம் தேறி வரும் யாஷிகா அடிக்கடி தன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இனி பைக், கார ஓட்ட மாட்டேன் :
அப்போது ரசிகர் ஒருவர் உங்களிடம் இருந்த புல்லட் பைக் என்ன ஆச்சு என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த யாஷிகா, “அந்த பைக் எனது வீட்டில் தான் இருக்கிறது. என்னுடைய அண்ணன் இப்போது அதை பயன்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, அனைவரும் ஒரு முக்கியமான தகவல், இனி நான் காரோ அல்லது பைக்கோ ஓட்டப் போவது இல்லை என முடிவெடுத்து உள்ளேன்” என்று கூறினார்.
யாஷிகா சொன்ன காரணம் :
இதையடுத்து ரசிகர்கள் சிலர் ஏன், எதற்காக இந்த அதிர்ச்சி முடிவை எடுத்து உள்ளீர்கள் என்று கேட்டதற்கு, “நான்தான் என் தோழியை கொன்று விட்டேன் என உங்களில் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் தான் இந்த முடிவு எடுத்துள்ளேன்” என்று நடிகை யாஷிகா ஆனந்த் வருத்தத்துடன் கூறியுள்ளார். யாஷிகாவின் இந்த முடிவை பலரும் வரவேற்று அவருக்கு ஆறுதலும் கூறி வருகின்றனர்.
