குறிஞ்சாங்குளம்: ஒருமையில் பேசிய டி.எஸ்.பி; வைரலான ஆடியோ - காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

0

தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம், விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் வசிக்கும் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 1992-ல் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், காந்தாரியம்மன் கோயில் கட்ட முயன்றனர். அதற்கு அந்தப் பகுதியில் உள்ள மாற்று சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பான தகராறில் ஒரு பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

அதனால் சங்கரன்கோவில், திருவேங்கடம், கோவில்பட்டி தாலுக்காவுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களிலும் சாதிய மோதல்கள் வலுவடைந்தன. காவல்துறையினரின் முயற்சியால் பின்னர் அந்தப் பகுதிகளில் அமைதி திரும்பியது. குறிஞ்சாங்குளம் படுகொலை தொடர்பாக 26 பேர் மீது வழக்குத் தொடரப்பட்ட போதிலும், அனைவரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 30 வருடங்களாக நீறுபூத்த நெருப்பாக அந்தப் பகுதிகளில், குறிப்பாக குறிஞ்சாங்குளம் கிராமத்தில் சாதிய வன்மம் நீடிக்கிறது. அதனால் பொதுவான இடத்தில் சிலையை அமைத்துத் தரக் கோரி ஒரு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சில அரசியல் கட்சியினர் அந்த விவகாரத்தை சாதிய பிரச்னையாக மாற்ற முயல்வதாக காவல்துறையினர் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த நிலையில், இன்று (மார்ச் 14-ம் தேதி) சர்ச்சைக்குரிய பொது இடத்தில் காந்தாரியம்மன் சிலையை நிறுவப்போவதாக சில சமுதாய அமைப்பினரும், அரசியல் இயக்கத்தினரும் அறிவித்ததால் பதற்றம் நிலவியது. அதனால் அந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சர்ச்சைக்குரிய கிராமம் பற்றியும் அங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஒரு சமுதாயத்தின் தலைவரிடம் சங்கரன்கோயில் டி.எஸ்.பி-யாக இருந்த ஜாஹீர் உசேன் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில் பேசும் ஜாஹீர் உசேன், ஒரு தரப்பு சமூகத்தினரையும் அதன் தலைவரையும் அவதூறாகவும் ஆபாசமான வார்த்தையாலும் திட்டுகிறார்.

சர்ச்சைக்குரிய ஆடியோவில் பேசும் டி.எஸ்.பி ஜாஹீர் உசேன்

அவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு சென்னைக்கு அழைக்கப்பட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும், குறிஞ்சாங்குளம் விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட சாதித் தலைவரிடம் டி.எஸ்.பி ஜாஹீர் உசேன் பேசி மன்னிப்புக் கேட்டுள்ளார். அந்த சர்ச்சைக்குரிய ஆடியோ வைரலாக பரவுகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/VDost58
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*