"அப்பு இறந்ததைத் தாங்க முடியாது" - புனித் ராஜ்குமார் இறப்பை அவரின் அத்தையிடம் மறைத்த குடும்பம்!

0

அக்டோபர் 29 ,2021 கன்னட திரையுலகை மட்டுமின்றி இந்திய திரையுலகையே கலங்க வைத்த தினம். தனது 46 வயதினில், கன்னட பவர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட புனித் ராஜ்குமார் இயற்கை எய்தினார். இவரின் இழப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவிற்குத் தமிழ் திரையுலகினர் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். புனித் ராஜ்குமார் மறைந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், புனித் ராஜ்குமாரின் மறைவினை அவரின் அத்தை, நாகம்மாவிடமிருந்து அவரின் குடும்பம் மறைத்து வருகின்றனர் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

புனித் ராஜ்குமார்

90 வயதான நாகம்மா,புனித் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமாரின் சகோதரி. நாகம்மாவின் இளமை பருவத்தில் அப்பு ( புனித் ராஜ்குமார்) வை அக்கறையுடன் பார்த்து கொள்வார் எனவும் நாகம்மவிற்கு அப்பு தான் மிகவும் பிடித்தமானவர் என்றும் அவரின் குடும்பத்தினர் தெரித்துள்ளனர். அப்புவும் கர்நாடகா, கஜனூர் கிராமத்திலுள்ள அவரின் அத்தை வீட்டிற்கு அடிக்கடி செல்வார் என்றும் கூறியுள்ளனர். ஆனால் அவரின் அத்தையிடம் புனித் ராஜ்குமார் இறந்த செய்தியை கூறாமல் ரகசியமாக மறைத்து வருகின்றனர்.
அதலால் ,நாகம்மாவின் வீட்டிலுள்ள புனித் ராஜ்குமாரின் உருவபடத்திற்கு மாலை அணிவிக்காமல் இருகின்றனர்.குடும்ப நபர்கள் எவரேனும் நாகம்மாவை சந்திக்க சென்றால் அவர்களிடம் அப்புவை பற்றிப் பேச வேண்டாம் என்று கூறி அனுப்புவார்களாம். புனித் ராஜ்குமாரின் சகோதரர் ராகவேந்திரா ராஜ்குமார் சமீபத்தில் அவரின்
அத்தை வீட்டிற்குச் செல்லும்போதும் புனித் ராஜ்குமார் இறந்த செய்தியைக் கூறாமல் ரகசியமாக மறைத்துள்ளார்.

இதுகுறித்து புனித் ராஜ்குமாரின் குடும்ப நபர் கூறுவதாவது ,"நாகம்மா, அப்புவின் நினைவு வரும் போதெல்லாம் , அவரைப் பற்றி கேட்பார். அவர் படபிடிப்பிற்க்காக வெளிநாடு சென்றுள்ளார் என்று கூறிவிடுவோம். நாகம்மா அப்புவின் திரைபடங்களை விரும்பிப் பார்ப்பார். அதனை வைத்து நாங்கள் சமாளித்து வருகிறோம். சில வருடங்களுக்கு முன்பு
ராகவேந்திர ராஜ்குமார் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தியை நாகம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாகம்மா, ராஜ்குமாரின் குழந்தைகளை தன் குழந்தைகள்போல் பார்த்துக்கொள்வார். அப்பு இறந்த செய்தியை நாகம்மாவால் பொறுத்து கொள்ள முடியாது. ஆகவே நாங்கள் அப்புவின்
மறைவு செய்தியை ரகசியமாக மறைத்து வருகிறோம்"என்று கூறினார்.



from தமிழ் சினிமா https://ift.tt/Ef32Igz
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*