சமந்தா, பிரபாஸுடன் என்ன பிரச்னை - விளக்கும் பூஜா ஹெக்டே!

0

பீஸ்ட் பட கதாநாயகி பூஜா ஹெக்டே தன் மீதான வதந்திக்கு நேரடியாக விளக்கம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். பூஜாவுக்கும் பிரபாஸ்க்கும் இடையே மோதல், சமந்தாவுடன் நெருக்கடி என வந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அவர் பேசியுள்ள நேர்காணல் அமைந்திருக்கிறது.

செய்தி இணையத்தளம் ஒன்றிற்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “பாஸிட்டிவ் செய்திகளைவிட நெகட்டிவ் செய்திகள் அதிகமாக விற்பனையாகின்றன. அவை உண்மையாக இல்லாத போதும் மக்கள் அதைப் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் ஆர்வமாக இருக்கின்றனர்”.

சமந்தா

மேலும், “அதனாலேயே என்னுடைய வாழ்க்கையை பாஸிட்டிவ் எண்ணங்களால் நிரப்பிக்கொள்கிறேன். என்னுடைய சமூக வலைதளங்களில் பாஸிட்டிவ் ஆன விஷயங்களை மட்டும் பகிர்வதற்கு அதுதான் காரணம். ஏற்கெனவே நிறைய நெகட்டிவிட்டி கொட்டிக்கிடக்கிறது. நான் அதனோடு இணைய விரும்பவில்லை. அதனை மறக்கவும் பாசிட்டிவில் கவனம் செலுத்தவும் முயற்சிக்கிறேன்.” என்று பதிலத்துள்ளார்.

இந்த வதந்திகளால் ராதே ஷ்யாம் படப்பிடிப்பில் பூஜாவுக்கும் பிரபாஸ்க்கும் சங்கடம் உருவாவதைத் தடுக்க படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். “பூஜா ஹெக்டே, பிரபாஸ் இருவரும் ஒருவர் மீது ஒருவர் நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். கேமராவுக்கு வெளியே நல்ல நட்புடன் இருப்பதால் தான் ஸ்க்ரீனில் நல்ல கெமிஸ்ட்ரி வெளிப்படுகிறது” என UV கிரியேஷன்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராதா கிருஷ்ணா குமார் இயக்கிய ராதே ஷ்யாம் படம் எதிர்மறை விமர்சனங்களால் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதிக பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 400 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அது உண்மையா என்பது தெரியவில்லை. பூஜா ஒவ்வொரு படத்திற்கும் அதற்கேற்ற விதி ஒன்று இருக்கும் எனத் தான் நம்புவதாக தெரிவித்திருந்தார்.



from தமிழ் சினிமா https://ift.tt/8zaP0c3
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*