வேலூர்: தாலி கட்டிய சில மணி நேரத்தில் மணப்பெண் மாயம்! - கணவர் புகார்; போலீஸ் விசாரணை!

0

வேலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ப்ளஸ் டூ முடித்துவிட்டு, வீட்டிலிருந்தார். திருமண வயதை எட்டிய அந்தப் பெண்ணுக்கு உள்ளூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. `உறவுமுறை' தவறிய காதல் என்பதால், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து பெண்ணின் பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்தனர். கடந்த 14-ம் தேதி காலை நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் அந்த இளம்பெண்ணுக்குத் திருமணம் நடைபெற்றது. மணக்கோலத்தில் திருமண ஜோடி பெண் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

மணப்பெண்

மணக்கோலத்தில் இருந்த பெண் சில மணி நேரத்துக்குள் வீட்டிலிருந்து மாயமாகியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த புது மாப்பிள்ளையும், உறவினர்களும் மணப்பெண்ணைத் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதேசமயம், அவர் காதலித்த முறை தவறிய அந்தக் காதலனும் உள்ளூரில் இல்லை. காதலனுடன் மணப்பெண் சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும், மணப்பெண்ணைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அவரின் பெற்றோரும் கணவரும் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்துள்ளனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திவருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/gQfHqS9
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*