போருக்கு எதிரான குரல்; சிவகார்த்திகேயன் ஜோடி; உக்ரைன் நடிகை Maria Ryaboshapka-ன் சுவாரஸ்யப் பின்னணி

0

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளியாகும் #SK20 படத்தில் உக்ரைன் நடிகை மரியா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. யார் இவர்? அவரைப் பற்றிய சில தகவல்கள்!

25 வயதான உக்ரேனிய நடிகை மரியா முதலில் அறிமுகமானது உக்ரேனிய படங்களில்தான்.

2018இல் வெளியான Eter என்கிற படத்தில் நடித்தார். இது சயின்ஸ் பிக்ஷன் வகையைச் சேர்ந்த Spanish திரைப்படம்.

ரஷ்யன், உக்ரேனிய மொழிகளில் நடித்து கொண்டிருந்தவர் இந்தியாவுக்கு வந்தது 'Special OPS 1.5: The Himmat Story' என்கிற வெப் சீரிஸின் வழியாக.

2021ல் வெளியான இந்த வெப் சிரீஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் நடாஷா என்கிற கதாபாத்திரத்தில் மரியா நடித்திருந்தார்.

திரைப்பட விழாக்களுக்கு போவது மரியாவின் வழக்கம். உக்ரைனில் நடைபெறும் Odesa International Film Festival இல் பங்கேற்றுள்ளார்.

வன்முறைக்கு எதிரானவர் மரியா. போருக்கு முன்னர், உக்ரைனில் நடைபெற்ற மனித தன்மையற்ற செயல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

படைப்பூக்கமும் சுதந்திரமும் தடை செய்யப்படாத சமூகத்தில் வாழ்வதே தன் விருப்பம் என்கிறார் மரியா.

சிவகார்த்திகேயன் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகும் முதல் படம் இது. Jathi Ratnalu படத்தின் இயக்குனர் Anudeep KV தான் இதற்கும் இயக்கம்.

உக்ரைன் மாடல் மற்றும் நடிகையான மரியாவைச் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக திரையில் பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்!



from தமிழ் சினிமா https://ift.tt/aGBHsSF
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*