கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாரியப்பன் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (76). இவரின் கணவர் சதாசிவம். இவர்களுக்கு 3 மகள், 1 மகன் உள்ளனர். சதாசிவம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் நாகலட்சுமி மகனுடன் வசித்து வந்தார். மகன் செந்தில் பணிக்கு சென்றிருந்தபோது, மகள் சாந்தா நாகலட்சுமியை பார்க்க வந்துள்ளார். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
அவர் வாயில் இருந்து ரத்தம் வடிந்திருந்தது. எவ்வளவு தட்டியும் எழவில்லை என்பதால், மருத்துவரை அழைத்து சோதனை நடத்தினர். அப்போது, `நாகலட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டார்.’ என்று மருத்துவர் கூறினார். நாகலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மாயமாகியிருந்தன.
இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், அருகில் உள்ள 17 வயது பிளஸ் 2 மாணவி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
முதலில் மறுத்த அந்த மாணவி, பிறகு நாகலட்சுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அந்த மாணவியும், அருகில் உள்ள இளைஞர் ஒருவரும் காதலித்து வருகின்றனர். சில மாதங்களில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அதற்காகதான் மூதாட்டியை கொலை செய்து நகையை திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாகலட்சுமியை கழுத்தை நெரித்து கொன்று 21 சவரன் நகையை மாணவி திருடியுள்ளார். மாணவியை கைது செய்த போலீஸார் நகையையும் மீட்டு கொடுத்துள்ளனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/smojn7g
via
