கரூர்: 2 மாவட்டங்களைச் சேர்ந்த 47 பேர்.... செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்தவர்கள் மீட்பு!

0

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்தில் உள்ள எல்லைமேடுப் பகுதியில் தனியார் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆண்கள், 6 பெண்கள், 12 குழந்தைகள் என மொத்தம் 28 பேர் மீட்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆண்கள், 7 பெண்கள், 7 குழந்தைகள் என 19 பேர் அதிகாரிகளால் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

மீட்கப்பட்ட 47 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

செங்கல் சூளையில் மீட்கப்பட்டவர்கள்

இந்த நிலையில், மேற்படி கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தனி அரசுப் பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு, இன்று 07.04.2022 காலை 5:00 மணி, 8:30 மணிக்கு முறையே திருவண்ணாமலை கோட்டாட்சியரிடமும், விழுப்புரம் கோட்டாட்சியரிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/9icFdu5
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*