9 நாள்களில் 3 யானைகள்; கோவையில் அடுத்தடுத்து உயிரிழக்கும் யானைகள்; நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

0

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரகம், பில்லூர் அணை வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

யானை

அப்போது நெல்லித்துறை காப்புக் காட்டில், 15 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் யானை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ``யானைக்கு 13 - 15 வயது இருக்கும். உயிரிழந்து இரண்டு நாள்கள் ஆகியிருக்கும். பிரேத பரிசோதனைக்குப் பிறகே, யானை இறப்புக்கான காரணம் தெரியும்.

கோவை வனப்பகுதி

வனத்துறை உயர் அதிகாரிகள், தன்னார்வலர்கள் முன்னிலையில் மருத்துவர்கள் நாளை பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.” என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சிறுமுகை வனச்சரகத்தில், குடிபோதையில் வந்த நவீன்குமார் என்ற இளைஞரை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை பல்வேறு காரணங்களால் 11 யானைகள் உயிரிழந்துள்ளன.

யானை

முக்கியமாகக் கடந்த 9 நாள்களுக்குள் 3 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. ``யானைகளைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/kGIB6WC
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*