`அங்கிளை அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ’ - தாயின் துணையுடன் திருமணம் தாண்டிய உறவால் சிறார் வதைக்கு ஆளான மாணவி

0

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது மனைவி சுனிதா மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் 16-வயதான மகளுடன் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான ராமசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் முதுகு தண்டுவட பிரச்னையால் படுத்த படுக்கையாகி, வீட்டிலேயே முடங்கியுள்ளார். இதனால் குடும்ப வறுமையால் வாடியது. குடும்ப சுமையை குறைக்க ராமசாமியின் மனைவி சுனிதா(37) புதுக்கடை பகுதியில் ராஜையன்(48) என்பவர் நடத்தி வரும் பர்னிச்சர் கடையில் வேலைக்கு சென்றுள்ளார். நாளடைவில் ராஜையனுக்கும் சுனிதாவுக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் சுனிதவின் வீட்டுக்கு சென்று அவருடன் தனிமையில் இருப்பது வழக்கமாம்.

சிறார் வதை

இந்த நிலையில் கடந்த சில நாகளுக்கு முன் சுனிதாவின் 16-வயது மகள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன்னை ஒருவர் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து சிறார்வதை செய்து வருவதாகவும், நான் தோழியின் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளேன், உடனே என்னை காப்பாற்றுங்கள் எனவும் கூறி அழுதுள்ளார். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பியூலா பெல்ஜெனிதா தலைமையில் அதிகாரிகள் அந்த சிறுமியை அவரின் தோழியின் வீட்டில் இருந்து மீட்டனர். பின்னர் இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி சிறுமியின் தாய் சுனிதா, அவரின் ஆண் நண்பர் ராஜையன் ஆகியோரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "வாரம் தவறாமல் சுனிதாவின் வீட்டுக்குச் செல்லும் ராஜையன் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதியும் அங்கு சென்றுள்ளார். வீட்டில் தாய் இல்லாததால் சிறுமியை அறைக்குள் அழைத்து சென்று ராஜையன் சிறார்வதை செய்யுள்ளார். இதுபற்றி சிறுமி தாயிடம் கூறிய போது, `அங்கிளுக்கு உன்மேல் ஆசை.. அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ' என்று கூறியிருக்கிறார். மேலும், இதுபற்றி வெளியே சொல்லாதே என்றும் கூறியுள்ளார் தாய் சுனிதா. தாய் சுனிதாவின் ஆதரவோடு கடந்த மூன்று மாதங்களாக 11-ம் வகுப்பு மாணவியை சிறார்வதை செய்துள்ளார். ஒருகட்டத்தில் தாய் மற்றும் தாயின் ஆண் நண்பரின் கொடுமை தாங்கமுடியாமல் தனது தோழியிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.

சிறார்வதை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராஜையன்

பின்னர் தோழியின் அறிவுறுத்தல் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலகை தொடர்புகொண்டு பேசியுள்ளார். சிறுமிக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாய் மற்றும் ராஜையன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றனர். பெற்ற மகளையே சிறார்வதைக்கு உட்படுத்திய தாயின் கொடூர செயல் குமரி மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3RCAq2W
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*