தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து பாஜக சார்பில் கோவை காந்திப்பார்க் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ``சொல்வதை மட்டும் செய்வதாக கூறும் திமுக, சொல்லாததை மட்டுமே செய்கிறது.
கடந்த கால வரலாறு தொடர்கிறது. அதிமுக வரி விதித்த போது அந்தக் கட்சியைப் பார்த்து, ‘சொத்து வரியா? சொத்தை பறிக்கிற வரியா?’ என்று கேட்டவர்கள் இப்போது சொத்தையே விற்று வரி கட்டும் அளவுக்கு வரி உயர்வு கொடுத்திருக்கின்றனர். திமுக கையாளாகாத அரசு.
குறைந்த காலத்தில் மக்களிடம் கெட்ட பெயரை எடுத்துக்கொண்ட ஓரே அரசு திமுகதான். உண்மையை சொல்லாமல், பொய்யை உண்மை போல சொல்லி திமுக வெற்றி பெற்றிருக்கிறது. இது கொலுசால் கிடைத்த வெற்றி. திமுக என்ற பெயரை கொலுசு பார்ட்டி என வைத்து கொள்ளலாம்.
உதயசூரியனுக்கு பதில் கொலுசை சின்னமாக வைத்துக்கொள்ளலாம். சொத்துவரியை உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு கொடுத்த ஆணையை காட்ட முடியுமா?. நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் மக்களை பாதிக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை.
பெட்ரோல், டீசல் விவகாரத்தில் மத்திய அரசு வருவாயை விட்டுக்கொடுத்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரால் பெட்ரோலிய பொருள்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக சொன்ன திமுக விலையை குறைக்க வில்லை.
ஆனால் விலை குறைப்பை பற்றி பேசாத மோடி விலையை குறைத்து இருக்கிறார். வேறு வழி இல்லாததால் வேதனையோடு மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கொடுத்திருக்கிறது. நிச்சயம் பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/adOKJ1f
via
