`இயற்கை வேளாண்மை என்றால் இனி இதுதான்!' - தொடங்கியது நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்

0

தமிழ்நாடு அரசு கடந்தாண்டு முதன் முதலாக தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், 'நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்' தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள வளங்குன்றா அங்கக வேளாண்மை துறை வளாகத்திலேயே ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணிகள், அந்தத் துறை தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்று வந்தன.

இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், உழவர் நலத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களைத் தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கும் காட்சி

அதன்படி கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், ஈரோடு பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி மையம், கோவை நம்மாழ்வார் ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவற்றை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், “வளங்குன்றா அங்கக வேளாண்மை துறை என்கிற பெயரை நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் என்று மாற்றியுள்ளோம். ஏற்கெனவே உள்ள கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இயற்கை விவசாயம் குறித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்.

நம்மாழ்வார்

ஏற்கெனவே உள்ள உள்ளீட்டு உற்பத்தி மையத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு, அதையும் விரிவுபடுத்த உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் பயிற்சி மையம் மற்றும் உற்பத்தி மையம் கொண்டு செல்லப்பட உள்ளது.

இந்தத் துறையில் ஏற்கெனவே நிறைய ஆராய்ச்சிகள் சென்று கொண்டிருக்கின்றன. இயற்கை விவசாயத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளன. அதன் குணாதிசயத்தை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்தில், ஒவ்வொரு நிலையிலும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்க உள்ளோம்.

நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்

விவசாயிகளுக்கு இருக்கும் உள்ளூர் தொழில்நுட்ப அறிவு (ITK) மற்றும் பல்கலைக்கழகத்துக்கு உள்ள அறிவியல்பூர்மான அறிவு இரண்டையும் பகுப்பாய்வு செய்து, இயற்கை வேளாண்மை என்றால் இதுதான் என்கிற வகையில் அந்த மையம் இயங்கும்” என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/bRJvqdB
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*