`யப்பா பிரபு... போனை எடுப்பா!'- பிரபுதேவாவிற்காக ரிங்டோன்களைப் பாடிய வடிவேலு; சந்திப்பின் பின்னணி

0

பிரபுதேவாவிடம், வடிவேலு `சிங் இன் தி ரெயின்..' ரைம்ஸை பாடும் வீடியோ ஒன்றை பிரபுதேவா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது வைரலானது.

வடிவேலு - பிரபுதேவா இருவரும் நெருங்கிய நண்பர்கள். டான்ஸ் மாஸ்டர் ஆக இருந்து ஹீரோவாக தனது பயணத்தை ஆரம்பிக்கும் போதிலிருந்து இவர்கள் நட்பு ரொம்பவே ஸ்ட்ராங்கானது. 'காதலன்', 'ராசய்யா', 'மிஸ்டர் ரோமியோ', 'மனதை திருடிவிட்டாய்' என பிரபுதேவாவின் பல படங்களில் வடிவேலுவின் காமெடிகள் ஒர்க் அவுட் ஆகின. பிரபுதேவா, தான் இயக்கிய 'போக்கிரி', 'வில்லு' படங்களிலும் வடிவேலுவை நடிக்க வைத்திருந்தார். அதிலும் `மனதைத் திருடிவிட்டாய்' படத்தில் `சிங் இன் தி ரெயின்' என வடிவேலு ரைம்ஸ் பாடும் காமெடி எவர்க்ரீன் காமெடியாக இன்றும் ரசிக்கப்படுகிறது.

'மனதைத் திருடிவிட்டாய்' காமெடி

சரி விஷயத்திற்கு வருவோம். இப்போது ஏன் வடிவேலுவைச் சந்தித்திருக்கிறார் நடனப்புயல்..! வடிவேலு 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்', 'மாமனிதன்' உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். பிரபுதேவா தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வடிவேலுவிடம் பேசி, சிரித்து மகிழ்வார். அவரும் பிரபுதேவாவிற்காக ரிங்டோன்கள் பயன்பாட்டிற்காக காமெடியாக பேசி ஆடியோக்களை அனுப்பி வைப்பார். அதில் உதாரணத்திற்கு ஒன்று 'பிரபு போனை எடுப்பா.. யப்பா பிரபு போனை எடுப்பா.. யப்ப்பா ப்ப்ப்ப்ப்பிரப்ப்ப்ப்பூ போனை யடுப்பா..' என வடிவேலுவின் குரல் செம மாடுலேஷன்களில் அசத்தும். இப்போது இவர்கள் திடீரென சந்தித்துக் கொண்டது பிரபுதேவா நடிக்கும் படத்திற்காக அல்ல.. வடிவேலு வின் படத்திற்காகத்தானாம். வடிவேலு நடிக்கும் 'நாய்சேகர் ரிட்டர்ன்'ஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமைக்க பிரபுதேவாவிடம் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள். பிரபுதேவாவும் க்ரீன் சிக்னல் காட்டியிருப்பதாகவும் தகவல். அந்த சந்திப்பின் போதுதான், 'சிங் இன் தி ரெயின்..' லூட்டியாகியிருக்கிறது. ஆக, 'நாய்சேகர் ரிட்டர்ன்'ஸில் ட்ரீட் காத்திருக்கிறது.



from தமிழ் சினிமா https://ift.tt/jXstiOH
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*